அடுத்தடுத்த அப்டேட்களில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் ஷாருக்கானின் ஜவான்!

Jawan Update: #AskSRK அமர்வின் இறுதியில் ஜவானின் முதல் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ஷாருக்கான்..!  

Written by - RK Spark | Last Updated : Jul 14, 2023, 02:51 PM IST
  • செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ஜவான்.
  • தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
  • சமீபத்தில் ஜவான் prevue வெளியானது.
அடுத்தடுத்த அப்டேட்களில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் ஷாருக்கானின் ஜவான்!  title=

ஜவானின் படத்தைப் பற்றிய உற்சாகமும், உத்வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜவான் மீதான அனைத்து அன்பையும் அவர் ரசிகர்களுடன் இணைக்க ஷாருக்கான் இன்று தனது பிரபலமான #AskSRK அமர்வுகளில் ஒன்றை நடத்தினார்.  #AskSRK அமர்வை நிறைவு செய்யும் தருணத்தில் ரசிகர்களுடன் சில வேடிக்கையான அரட்டைப் பேச்சுகளுக்குப் பிறகு, படத்தின் போஸ்டரை வெளியிட்டு, ஷாருக்கான் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஷாருக்கான் தனது #AskSRK அமர்வுகளில் இதற்கு முன் இதை செய்ததில்லை என்பதால், அவரது இந்த செயல்.. அவரது ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

ஷாருக் கான் ஜவானின் புதிய கூல் போஸ்டரை வெளியிட்டார். அதில் அவரது தீவிரமான 'வழுக்கை' தோற்றத்தை காட்டினார். இது ஜவான் ப்ரிவியூக்கு பிறகு மிகவும் பிரபலமானது. இந்த போஸ்டர்.. ஏற்கனவே படத்திற்கான உற்சாகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. சமூக ஊடகங்களில் ஷாருக் கானின் #AskSRK அமர்வு, சூப்பர் ஸ்டாருடன் உரையாடுவதற்கும், அவரது நகைச்சுவையான மற்றும் புத்திசாலித்தனமான பதில்களை காண்பதற்கும் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய ஒரு வாய்ப்பாகும். ஜவான் ப்ரிவியூவின் உற்சாகமான வெளியீட்டைத் தொடர்ந்து #AskSRKவில் ஷாருக்கானின் தோற்றத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதிக தாமதமின்றி சூப்பர் ஸ்டார் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் தன்னுடைய பிரத்யேக பாணியில் உரையாடலை நடத்தினார். 

5 வருடங்கள் ஷாருக்கானின் படம் எதுவும் வெளிவராததை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் ‘பதான்’ படம் வெளியானது. இதையடுத்து வெளிவர இருக்கும் படம், ஜவான். ஷாருக்கு இதுவரை எடுக்காத அவதாரத்தை இந்த படத்தில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி 2019ஆம் ஆண்டு ‘பிகில்’ படத்தை இயக்கிய அட்லீ அதன் பிறகு இந்த படத்தைதான் இயக்கி வருகிறார். அதனால், இப்படத்தின் மீது பலருக்க மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.  மேலும் ஜவானின் அதிரடியான பிரிவியூவில் ஷாருக்கானின் பல்வேறு தோற்றங்கள்.. இதுவரை கண்டிராத ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. இத்திரைப்படத்தின் பிரிவியூ 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை அனைத்து தளங்களிலும் பெற்று இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையை படைத்திருக்கிறது.  முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவான் ட்ரைலர் எளிதாக முறியடித்திருக்கிறது. ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க | TTF Vasan காதலி இவரா? கடுப்பான நடிகை பதிலடி!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News