ரீ ரெக்கார்டிங்கிற்கே கூப்டல இது என்ன நியாயம்- இளையராஜா மீது இயக்குநரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

மாமனிதன் திரைப்படத்தின் ரீ ரெக்கார்டிங்கிற்கு தன்னை அழைக்கவில்லை என படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 17, 2022, 06:00 PM IST
  • இளையராஜா மீது சீனுராமசாமி குற்றச்சாட்டு
  • ரீ ரெக்கார்டிங்கிற்கு இயக்குநரை அழைக்காத இளையராஜா
ரீ ரெக்கார்டிங்கிற்கே கூப்டல இது என்ன நியாயம்- இளையராஜா மீது இயக்குநரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு title=

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோரை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட நாள்களாக ரிலீஸாகாமல் இருந்த மாமனிதன் வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து படத்துக்கு இசையமைத்திருக்கின்றனர். இந்நிலையில் மாமனிதன் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி,காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Seenu Ramasamy

அப்போது பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “இளையராஜா மீது மிகப்பெரிய பற்றுக்கொண்டவன் நான். அதனால்தான் படத்தின் முதல் ஷாட் எடுக்க கேமராவை இளையராஜாவும் அவரது சகோதரர்களும் வாழ்ந்த தெருவில் வைத்தேன். படத்திற்கு முதலில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைப்பதாக இருந்தது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கார்த்திக் ராஜா விலகிக்கொண்டார்.

இந்தச் சமயத்தில் படத்தை பார்த்த இளையராஜா என்னை கூப்பிடாமலேயே ரீ ரெக்கார்டிங்கை முடித்துவிட்டார். இது எந்தவிதத்தில் நியாயம்.

Yuvan

அதுமட்டுமின்றி அவர்களிடம் போகும்போதே அவர்களுக்கு சரியாக இருக்கும் கவிஞர்களை வைத்துதான் பாடல் எழுதுவார்கள் என்று சிலர் கூறினர். நானும் அதற்கு ஒத்துக்கொண்டேன். ஆனால் பாடல் வரிகள்கூட எனக்கு தெரியவில்லை.

ஒருமுறை யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தபோது கருணாகரன் என்பவர் வந்து வணக்கம் நான் பாடலாசிரியர் கருணாகரன். மாமனிதன் படத்துக்கு பாடல் எழுதியிருக்கிறேன் என என்னிடமே கூறினார்.

மேலும் படிக்க | ரோபோவுக்கு உலகநாயகன் கொடுத்த முத்தம்... வைரலாகும் புகைப்படம்

ரீ ரெக்கார்டிங்கிற்கு என்னை அழைக்காதது குறித்து யுவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், நீங்கள் கார்த்திக் ராஜா பெயரை போடாததால் அவரது தந்தை படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ள மாட்டார் என்றார். எனக்கு அது அதிர்ச்சி அளித்தது.

வைரமுத்து எனது படங்களில் தொடர்ந்து பாடல் எழுதியவர். அவருடன் வேலை செய்தது பிடிக்கவில்லை என்றால் யுவனும்தானே வைரமுத்துவுடன் வேலை செய்திருக்கிறார். அவருடன் மட்டுமி சேர்ந்துகொண்டு என்னை ஏன் ஒதுக்குகிறார்” என்றார். தற்போது சீனுராமசாமியின் இந்தக் குற்றச்சாட்டு கோலிவுட்டில் பரபரப்பாகியுள்ளது.

மேலும் படிக்க | மாநாடு கூட்டியவருடன் இணையும் சிவகார்த்திகேயன்?... உற்சாகத்தில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News