பீஸ்ட் படம் பான் இந்தியா படமாக நாளை வெளியாக உள்ளது. குறிப்பாக யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படத்துக்கு போட்டியாக பீஸ்ட் வெளியாக உள்ளது. அதன்படி நாளை இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 800 க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் முன்பதிவு பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் 426 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மாலில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட பொதுமக்களைக் காப்பாற்றும் ஹீரோ, பணயக் கைதிகளாக இருக்கும் அவர்களை எப்படி பாதுகாக்கிறார், காப்பாற்றுகிறார். ஹாலிவுட் ஜான் விக் கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்
காவி நிறத்தை கத்தியை கொண்டு விஜய் கிழிப்பதும் போன்றும் ஒரு மாலை கையகப்படுத்தியவர்களை அடித்து துவம்சம் செய்வதும் என பீஸ்ட்டில் நடித்துள்ளார் விஜய். இந்த படத்தை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குவைத், கத்தாரில் பீஸ்ட் தடை செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் மற்றும் குரூப் ஆகிய படங்களும் அந்நாட்டில் இதேபோல் தடைசெய்யப்பட்டன. விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்துக்குத் தணிக்கைக் குழு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி, 12 வயதுக்குக் குறைவானவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி இப்படத்தைக் கண்டுகளிக்கலாம். 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகனான தளபதி விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது, அதனையடுத்து இயக்குனர் நெல்சனுக்கு 8 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதோடு, இசையமைப்பாளர் அனிருத்துக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் 175 கோடி என சொல்லப்படுகிறது.
நடிகை பூஜா ஹெக்டேக்கு கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகுவது மட்டுமல்லாமல் அவர் இப்படத்திற்கு பொருத்தமாக இருந்தார், அதோடு படக்குழுவினருடன் நன்கு இணங்கி செயல்பட்டார் என்றும் கூறப்படுகிறது. 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியை தேர்வு செய்யும் சமயத்தில் 'அலா வைகுந்தபுரமலோ' படம் வெளியானது. இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பு சிறப்பாக அமைந்ததோடு, பலரது இதயங்களையும் அவர் கவர்ந்தார். இதுவரை விஜயுடன் இணைந்து பணியாற்றாத புது கதாநாயகியை தான் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யவேண்டும் என நினைத்த எனக்கு பூஜா ஹெக்டே சிறந்த தேர்வாக அமைந்தார், அதனால் அவரை ஒப்பந்தம் செய்தேன் என்று நெல்சன் கூறி இருந்தார்.
இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினராக உள்ள உமர் சந்து என்பவர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பீஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “பீஸ்ட், அனைத்து அம்சங்களிலும் சிறப்பான திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆற்றல் நிறம்பிய படைப்பு. எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் முழுமையான புரிதலோடு கதையை விளக்கி உள்ளனர். சந்தேகத்திற்கு இடமின்றி நடிகர் விஜய்யின் நடிப்பு வேறலெவல். மொத்ததில் பீஸ்ட் ஒரு மிடுக்கான ஆக்ஷன் திரில்லராக உள்ளதால் நிச்சயம் உங்களை கவரும். அதன் மால் செட் கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதைக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ள அவர், இப்படத்திற்கு நான்கு ஸ்டார்களை கொடுத்துள்ளார். அதேவேளையில் இவர் கே.ஜி.எஃப் 2 படத்துக்கு 5 ஸ்டார்கள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR