சசிகுமாரின் அடுத்த படத்தின் அப்டேட் இதே!!

இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரிக்க இருக்கிறார்.

Last Updated : Nov 21, 2017, 09:05 AM IST
சசிகுமாரின் அடுத்த படத்தின் அப்டேட் இதே!! title=

இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரிக்க இருக்கிறார்.

முன்னதாக சசிகுமார் நடிப்பில் ‘கொடிவீரன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் மகிமா, பூர்ணா, சனுஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். முத்தையா இயக்கி வரும் இப்படத்தை சசிகுமார் தனது, கம்பெனி புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இதற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 30-ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு முடுவுசெய்துள்ள நிலையில், 

தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு ‘அசுரவதம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை மருது பாண்டியன் இயக்கவுள்ளார். 

 

 

Trending News