கடந்த ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த படம் 'டிக்கிலோனா'. இப்படத்தில் அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, யோகி பாபு, ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ராஜேந்திரன், மாறன் குமார், நிழல்கள் ரவி, ஹர்பஜன் சிங், சித்ரா லட்சுமணன் ஆகியோர் நடித்துள்ளனர். இது நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட அறிவியல் ரீதியான படம்.
இப்படத்திலுள்ள 'பேர் வெச்சாலும்' ரீமிக்ஸ் பாடலில் நடிகை அனகாவின் நடன அசைவுகள் அனைவரையும் ஈர்த்தது. யுவன் ஷங்கர் இசையமைத்த இந்த பாடல் இன்று வரை பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. டைம் மிஷினில் ட்ராவல் செய்து கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட பிழையை சரிசெய்யும் கதாநாயகனின் பயணத்தை நகைச்சுவையாக இப்படம் ரசிகர்களுக்கு கொடுத்தது.
இப்படத்திலுள்ள 'இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கில' போன்ற வசனங்கள் பல மீம் க்ரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்தது. பல தரப்பிலிருந்தும் கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றது. தற்போது இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி மற்றும் சந்தானம் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தில் யூடியூபர் இடிஷ் பிரகாஷ் ஒரு பகுதியாக இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | ’எதற்கும் துணிந்தவன்’ டீமில் இணைந்த சிவகார்த்திகேயன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR