‘சங்கு சக்கரம்’ படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

‘சங்கு சக்கரம்’ படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : Dec 22, 2017, 05:17 PM IST
‘சங்கு சக்கரம்’ படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு title=

மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சங்கு சக்கரம்’. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இவர்களுடன் ‘புன்னகைப்பூ’ கீதா, ஜெர்மி ரோஸ் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஜி.ரவிகண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இப்படத்தின் இசை கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது.  தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘சங்கு சக்கரம்’  படம் வரும் 29-ம் தேதி ரிலீஸாக உள்ளது என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Trending News