Sandhya Raagam TV Serial Zee Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரகுராம் நீ பேசியது எதையும் நான் கேட்கவில்லை என்று சொல்லி வருத்தப்பட மாயா இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுங்க பெரியப்பாவுக்கு தெரியாதது தெரியாததாகவே இருக்கட்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மாயா சொன்னதை கேட்டு ஜானகியும் சரி என்று சம்மதம் சொல்கிறாள். இதைத்தொடர்ந்து ரகுராம் வீட்டுக்கு வர பார்வதி கல்யாணத்தின் போது இப்படி நடந்திருந்தால் என்ன ஆகிறது என்று சொல்லி வருத்தப்பட எல்லோரும் பார்வதியை திட்டுகின்றனர்.
ரகுராம் அவ சொல்றது சரிதானே நான் கல்யாண பொறுப்பை வேற ஒருத்தரிடம் ஒப்படைக்க போறேன் என்று சொல்ல எல்லோரும் அது சிவராமனாக இருக்கும் என்று நினைக்க ரகுராம் மாயாவின் பெயரை சொல்கிறார்.
இதைக் கேட்டு எல்லாரும் ஷாக்காக மாயா இதை நல்லபடியா செய்து முடிப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு நீ என்ன மாயா சொல்ற என்று ரகுராம் கேட்க கண்டிப்பா நான் நல்லபடியா செய்து முடிப்பேன் பெரியப்பா என்று வாக்கு கொடுக்கிறாள்.
அதைத் தொடர்ந்து மாயா மேலே வர சீனு உன்னுடைய கஷ்டம் புரியுது என்று எமோஷனலாக பேசுகிறான். மேலும் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க - நினைத்தேன் வந்தாய் சீரியல்: அனைவரும் ஷாக்.. அனைவரும் அதிர்ச்சி.. நடக்க போவது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ