தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை சினிமாவிற்கு உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் வருகிறது. ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியும் இதற்க்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். சினிமாஇல் சமீபகாலமாக வில்லன்களுக்கு சமமான முக்கியத்துவமும், கவனமும் அதிகரித்து வருகிறது. வில்லத்தனத்தில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் ஹீரோக்களை தாண்டி, நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற சில பெண் நடிகைகளும் உள்ளனர். தமிழ்த் திரைப்படங்களில் அவர்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்துள்ளது. சில கதாபாத்திரங்களில் நடித்து தங்களது பெயரை கல்வெட்டில் பதிய வைத்துள்ளனர் என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!
ரெஜினா கசாண்ட்ரா
2021 ஆம் ஆண்டு வெளியான சக்ரா திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் செஸ் பயிற்சியாளராக நடித்தார். இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து இருந்தார் ரெஜினா. சக்ராவில் ரெஜினா கசாண்ட்ராவின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது. சக்ராவில், ரெஜினா கசாண்ட்ராவின் கதாபாத்திரம் இன்றைய நடிகைகளுக்கும் நெகட்டிவ் ரோலில் நடிக்கலாம் என்ற ஆசையை தூண்டியது.
ரம்யா கிருஷ்ணன்
1999ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து ரம்யா கிருஷ்ணன் காலத்தால் அழியாத புகழுக்கு சென்றுள்ளார். ஒரு சக்திவாய்ந்த மற்றும் பழிவாங்கும் பெண்ணாக அவரது நடித்து தமிழ் சினிமா உலகில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நீலாம்பரியின் கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புத் திறமையை உயர்த்தி காட்டியது மட்டுமல்லாமல் மற்ற நடிகைகளுக்கு நெகட்டிவ் வேடங்களில் நடிக்கவும் வழி வகுத்தது. நடிகைகள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்தால் வெற்றி பெறலாம் என்ற கருத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது இவர் தான்.
சமந்தா
மனோஜ் பாஜ்பாயின் தி ஃபேமிலி மேன் 2ல் ராஜி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந்த ராஜி கதாபாத்திரம் அவரை இந்தியா முழுவதும் பிரபலபடுத்தியது.
திரிஷா கிருஷ்ணன்
கொடி படத்தில் அரசியல்வாதியாக த்ரிஷாவின் கதாபாத்திரம் ஒரு நடிகையாக அவரது பன்முகத் திறனை வெளிப்படுத்தியது. கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து, ஒரு கட்டத்தில் அவரையே அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படவே அதையும் செய்வார். பெண் அரசியல்வாதியாக த்ரிஷாவிற்கு இந்த படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.
ஜோதிகா
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்திற்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படம் மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். பச்சைக்கிளி முத்துச்சரத்தில் கீதா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரது பாராட்டைப் பெற்றது. Derailed நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம் வெளியானதும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. சரத்குமாருடன் திருமணத்துக்குப் புறம்பான உறவில் சிக்கிய திருமணமான பெண்ணாக ஜோதிகா நடித்துள்ளார்.
அனசுயா பரத்வாஜ்
அனசுயா பரத்வாஜ் அல்லு அர்ஜுனின் புஷ்பாவில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார், மேலும் புஷ்பா 2 படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். அனசுயா தனது சிறந்த நடிப்பிற்காக இரண்டு SIIMA விருதுகள், ஒரு IIFA உத்சவம் விருது மற்றும் ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
ரீமா சென்
கொல்கத்தாவைச் சேர்ந்த ரீமா சென், பிளாக்பஸ்டர் ஹிட்டான மின்னலே படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். வல்லவன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்களில் ரீமா சென் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். வல்லவன் படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சகர்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதேபோல், ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ரீமா சென் நெகட்டிவ் பாத்திரத்தில் மற்றொரு சிறந்த நடிப்பை வழங்கினார்.
மேலும் படிக்க | ரவுடி காந்தாராவின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் ரங்கநாயகி! செம டிவிஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ