’நான் மறுத்தேன், அல்லு அர்ஜூன் தான் காரணம்’ - சமந்தா

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு முதலில் ஆடுவதற்கு விருப்பமில்லை என சமந்தா தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:23 AM IST
  • ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஏன் ஆடினேன்
  • நடிகை சமந்தா முதன்முறையாக பேசியுள்ளார்
  • அல்லு அர்ஜூன் கட்டாயப்படுத்தினார்
’நான் மறுத்தேன், அல்லு அர்ஜூன் தான் காரணம்’ - சமந்தா title=

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ’புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மெகா ஹிட் அடித்தது. படம் வருதற்கு முன்பே வெளியான ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மெகா ஹிட் அடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை இருமடங்காக உயர்த்தியிருந்தது. இதுரை ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருந்த சமந்தா, முதன்முறையாக இப்படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார்.

மேலும் படிக்க | துல்கர் சல்மானுடன் டூயட் பாடிய சிவாங்கி - குக் வித் கோமாளியில் அட்ராசிட்டி

அவரின் கவர்ச்சி மற்றும் கலக்கலான நடனம் பாட்டை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. அண்மையில் வெளியான பாடல்களிலேயே பான் இந்தியா ஹிட்டான ஒரே பாடல் சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் தான். இந்தப் பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து மனம் திறந்து பேசியுள்ள நடிகை சமந்தா, அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் முதன்முதலாக இப்பாடலுக்கு நடனம் ஆடுமாறு கேட்டுக் கொண்டபோது, தான் அதனை தவிர்த்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆடியதாகவும், இந்த பாட்டுக்கு கிடைத்துள்ள பெருமை அவர்களுக்கே சேரும் சமந்தா கூறியுள்ளார். அவர்கள் பேச வரும்போது இந்தப் பாடல் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், இப்போது மக்கள் கொடுத்திருக்கும் வரவேற்பை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பாடல் வெளியான பிறகு, தன்னுடைய மற்ற அனைத்து படங்களையும் மக்கள் மறந்துவிட்டதாகவும், இந்த ஒரு பாடலை வைத்து தன்னை அடையாளப்படுத்துவதாகவும் நடிகை சமந்தா பெருமையாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | ’அந்த வாழ்க்கையை விரும்பவில்லை’ - சன்னிலியோனின் எமோஷ்னல் விளக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News