அரசியலுக்கு வருவதினை உறுதிப்படுத்தினார் RJ பாலாஜி!

RJ பாலாஜி புதிய அரசியல் கட்சி தொடங்கிவிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், அவர் திரைப்படம் ஒன்றில் அரசியல் தலைவராக நடிக்கின்றார் என உறுதிப்படுத்தியுள்ளார்!

Last Updated : May 19, 2018, 07:02 PM IST
அரசியலுக்கு வருவதினை உறுதிப்படுத்தினார் RJ பாலாஜி! title=

RJ பாலாஜி புதிய அரசியல் கட்சி தொடங்கிவிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், அவர் திரைப்படம் ஒன்றில் அரசியல் தலைவராக நடிக்கின்றார் என உறுதிப்படுத்தியுள்ளார்!

சமீப காலமாக தனது ட்விட்டர் வாயிலாகவும், நேரடியாகவும் சமூக பிரச்சணைகள் குறித்து குரல் கொடுத்து வருபவர் RJ  பாலாஜி. இவர் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் புதிய கட்சி கொடி ஒன்றினையும் அறிமுகம் செய்தார். இதனால் அவர் கட்சி தொடங்கியது உன்மை தான் என பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் தனது அரசியல் வரவினை குறித்து தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

LKG என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை தானே எழுதி நடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் சர்சையான கருத்துகளுக்கு பெயர் போன நாஞ்சில் சம்பத் அவர்கள் RJ பாலாஜிக்கு தந்தையாக நடிப்பதாகவும், நடிகை பிரியா ஆனந்த முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை வாயிலாக நாட்டின் நடப்பினை எடுத்துரைக்கும் படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News