திரும்பி வந்துட்டேனு சொல்லு... சிஎஸ்கே கோட்டையில் கம்பேக் கொடுத்த ஜடேஜா!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, மாஸான கம்பேக்கை கொடுத்துள்ளார். தொடர்ந்து, அவரின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 27, 2023, 05:22 PM IST
  • சௌராஷ்டிரா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
  • இரண்டாம் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா.
திரும்பி வந்துட்டேனு சொல்லு... சிஎஸ்கே கோட்டையில் கம்பேக் கொடுத்த ஜடேஜா! title=

ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு - சௌராஷ்டிரா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. ஜன. 24ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி நான்காவது நாளான இன்று நிறைவடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில், 324 ரன்களை எடுத்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த சௌராஷ்டிரா 192 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து, நல்ல முன்னிலையில் உடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 133 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், சௌராஷ்டிரா அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | டெஸ்டிலும் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும், இந்திய அணி அவரை நம்பியே உள்ளது -சவுரவ் கங்குலி

ஆனால், தமிழ்நாடு வீரர் அஜித் ராமின் அசாத்திய சுழலால், சௌராஷ்டிரா அணி மண்ணை கவ்வியது. இதில்,சௌராஷ்டிரா தோல்வியடைந்தாலும், இந்திய ஆல்-ரவுண்டர் ஜடேஜாவின் எழுச்சி பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. நீண்ட நாளாக காயத்தில் இருந்த ஜடேஜா, அதில் இருந்து மீண்டு பின் விளையாடி முதல் போட்டியிலேயே பந்துவீச்சில் கலக்கியிருப்பதுதான் அந்த உத்வேகத்திற்கான காரணம். 

டெஸ்ட் ஆல்-ரவுண்டர் பிரிவில் ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய தொடரின் மூலம் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா அணிக்கு திரும்பவதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பலம் பெறும். கூடவே, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல ஜடேஜாவின் பங்கும் இன்றியமையாதது. இடதுகை வீரரான ஜடேஜாவின் தேவை டெஸ்ட் போட்டியில் மட்டுமின்றி, ஒருநாள் அரங்கிலும் இந்தியாவுக்கு பெரும் தேவையாக உள்ளது. 

ரிஷப் பண்டிற்கு விபத்து காரணமாக இடதுகை வீரருக்கு பெரும் கிராக்கி உள்ளது. அதுவும் அக்சர் படேலை தவிர்த்து ஆல்-ரவுண்டர் தரப்பில் இடதுகை வீரர் வேறு யாரும் இந்திய அணியில் இல்லை. எனவே, இந்தாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையிலும் ஜடேஜா விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் எதிர்பார்ப்பு. 

தொடர்ந்து, ஜடேஜாவின் இந்த கம்பேக்கை பலரும் கொண்டாடி வரும் நிலையில், 7 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்தில் கையெழுத்திட்டு, ஜடேஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "இந்த சீசனின் முதல் செரி... அதுவும் சிவப்பு செரி" என பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் கம்பேக், ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாயகமாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | IND vs NZ: பார்மில் கில்... பாவம் பிருத்வி ஷா - ஹர்திக் பாண்டியா கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News