IMDB-யின் டாப் 10 பட்டியலில் ராட்சசன், 96 திரைப்படம்!

பிரபல அமெரிக்க வலைதளமான IMDB-யின் டாப் 10 இந்திய திரைப்படங்கள் பட்டியலில் இரண்டு தமிழ் படங்கள் இடம்ப்பெற்றது!

Last Updated : Dec 14, 2018, 07:27 AM IST
IMDB-யின் டாப் 10 பட்டியலில் ராட்சசன், 96 திரைப்படம்! title=

பிரபல அமெரிக்க வலைதளமான IMDB-யின் டாப் 10 இந்திய திரைப்படங்கள் பட்டியலில் இரண்டு தமிழ் படங்கள் இடம்ப்பெற்றது!

மக்களின் மதிப்பீட்டினை மையமாக வைத்து இயங்கும் பிரபல திரைப்பட மதிப்பீட்டு தளமான IMDB, 2018-ஆம் ஆண்டிற்கான டாப் 10 இந்திய திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டு தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. 
விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகிய திர்லர் திரப்படம், விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வெளியான 96 திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தெலுங்கு படமான 'மகாநதி' திரைப்படமும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

IMDB-யின் டாப் 10 இந்திய திரைப்படம்,..

  1. அந்தாதுன் (ஹிந்தி)
  2. ராட்சசன் (தமிழ்)
  3. 96 (தமிழ்)
  4. மகாநதி (தெலுங்கு)
  5. பதாய் ஹோ (ஹிந்தி)
  6. பட்மேன் (ஹிந்தி)
  7. ரங்கஸ்தலம் (தெலுங்கு)
  8. ஸ்ட்ரீ (ஹிந்தி)
  9. ராசி (ஹிந்தி)
  10. சஞ்சு (ஹிந்தி)

கடந்த வருடம் வெளியான பட்டியலில் 'விக்ரம் வேதா' முதல் இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Trending News