கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பொன் விலங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் 2003ஆம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார். தற்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர். கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயகுமார், கனல்கண்ணன், இயக்குநர் பேரரசு, பிரவின் காந்தி உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசினர்.
மேலும் படிக்க | KPY பாலாவுக்கு கல்யாணமா!? அவரே கொடுத்த அப்டேட்…
சின்னக்கவுண்டர் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், இயக்குனர் பேரரசு போல ரஞ்சித்தும் இந்தப் படத்துக்கு கவுண்டம்பாளையம் என ஊர் பெயரை மட்டும் தான் வைத்துள்ளார். இதை சாதிய படமாக பார்க்கக்கூடாது. சின்னக் கவுண்டர் படத்தைத் நான் இயக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. இந்த தலைப்பை ஏன் வைக்கின்றீர் என யாரும் கேட்கவில்லை. அதே போல படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் வெள்ளி விழா படமாக மாற்றினர். அதை தவிர்த்து யாரும் இந்த படத்தை பார்த்து விட்டு சாதிய சண்டை போடவில்லை. ஆனால் சமீபத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான காடுவெட்டி படம் சாதியப் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
Kavundampalayam Official Trailer | Ranjith | Vijay shankar - https://t.co/rM57yRxSVL#KavundampalayamTrailer
A #Ranjith Flim#kavundampalayamaudio #Ranjith #Kavundampalayam #Ranjith #spsmovies #audiorights #Vijaishankar #Thirugnanasambantham #subramaniam #Palanisamy pic.twitter.com/xORkvxng2i
— Five Star Audio (@FiveStarAudioIn) May 11, 2024
இவ்விழாவில் பேசிய பிரவின் காந்தி, “நான் எப்போதும் சாதிப் படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு எதிரானவன். பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குநர்களின் வளர்ச்சிக்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி ஆகிவிட்டது. சினிமாவில் சாதியைச் சொல்லவேக் கூடாது. அப்படி சொல்பவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன். ரஞ்சித் ஹாப்பி ஸ்ட்ரீட் என்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர். எனது சகோதர்கள் கெட்டுப்போகக் கூடாது என நினைப்பவர். இவர் நிச்சயம் நல்ல படம் எடுத்திருப்பார். அது சாதியப் பின்னணியில் வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் நிச்சயம் நல்ல படமாக சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் படமாக இருக்கும். திட்டம் போட்டு நாடக காதல் செய்து நாட்டை நாசமாக்கும் எவரையும் தண்டிக்கும் உரிமை நல்லவர்களுக்கு உண்டு. ரஞ்சித்திற்கும் அந்த பட்டியலில் இடம் உண்டு” என்று பேசினார்.
கனல் கண்ணன் பேசுகையில், “இப்படம் நம்மை அடிப்பவர்களை நாம் திருப்பி அடிக்க தயாராகி விட்டோம் என்பதை உணர்த்தும். எல்லோரும் நசுக்குறாங்க, பிதுக்குறாங்க என்று சொல்லிட்டே இருக்காங்க. நாங்கள் இதுவரை சினிமாவில் யாரையும் நசுக்கவும் இல்லை, பிதுக்கவும் இல்லை. நீங்க பிதுக்குனா நாங்க நசுக்குவோம். இன்னும் பேச வேண்டாம். ஏற்கனவே வழக்கு போட்டு குண்டாஸ் போட பிளான் பண்றாங்க. நான் மாட்ட மாட்டேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில் "நாடகக் காதலில் ஏன் சாதி முத்திரை குத்துகிறீர்கள்? நாடகக் காதல் செய்வதும் ஒன்று தான், ஒரு பெண்ணை ஏமாற்றிக் கற்பழிப்பதும் ஒன்று தான். பெண்களை ஏமாற்றுபவன் எந்த சாதியும் இல்லை அவன் மிருகம். ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து ரஞ்சித் அவருடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களை பெற்ற அனைவருக்கும் இந்தக் கோபம் வரவேண்டும். சமூகத்தை சீரழிப்பவன் எல்லாம் இயக்குநராக இருக்க முடியாது.
ஒரு இயக்குநர் என்றால் சமூகத்தை சீர்திருத்த வேண்டும். சமூக அக்கறையோடு படங்கள் எடுக்க வேண்டும். சிதம்பரம் பிள்ளை, சுவாமிநாதன் ஐயர், முத்துராமலிங்க தேவர் போன்ற பலரின் பெயரில் இருக்கும் சாதியை அழித்து விட்டால் அவர்களின் அடையாளங்கள் அழிந்து போய்விடும். நீங்கள் தான் அதை சாதியாகப் பார்க்கிறீர்கள், எங்களுக்கு அவை வரலாற்றுப் பதிவு. தயவு செய்து அடையாளங்களை சீரழிக்காதீர்கள். சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் சாதி சான்றிதழ்களை முதலில் ஒழியுங்கள்" என்று பேசினார்.
மேலும் படிக்க | இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ