நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகிபாபு மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இப்படத்தின் 25 வது நாளை ரஜினி ரசிகர்கள் வெகு விமர்சையாக பல்வேறு திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் 25 வது நாளையொட்டி ஏராளாமான ரசிகர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினி பட பேனர்களுக்கு மாலை அணிவித்து, சூடமேற்றி பூசணிக்காய் சுற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து அம்பிகா திரையரங்கம் முன்பு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உற்சாகத்தோடு ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | தனுஷுடன் மீண்டும் இணையும் நித்யா மேனன்..! எந்த படத்தில் தெரியுமா..?
அம்பிகா திரையரங்கிற்கு வந்த நடிகர் சரவணனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். தொடர்ந்து ஜெயிலர் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் நடிகர் சரவணனை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் சரவணனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. பின்பு, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சரவணன் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் போல. இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என அவருக்கு எல்லாமே தெரியும். ரஜினியின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய ஒரே மாதத்தில் ஹீரோ ஆனவன் நான். ஜெயிலர் படம் ஹிட் ஆகும் எனத்தெரிந்து தான் ரஜினி இமயமலைக்கு சென்றார். ரஜினியின் வாக்கு சித்தர் வாக்கு மாதிரி. ரஜினி ஒரு கடவுள் தான். ரஜினி ஒரு சித்தர். அதை மதுரையில் உட்கார்ந்து கொண்டு சொல்கிறேன்.
ரஜினி சாரிடம் எல்லாமே எனக்கு பிடிக்கும், அவர் பிடிக்காத ஒன்று என்பது இல்லவே இல்லை. நடந்தால் பிடிக்கும், திரும்பினால் பிடிக்கும், ரஜினி சாரை பார்த்து இன்று வரை ரஜினி சார் மாதிரி சட்டை போட்டு வருகிறேன். ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு, ஆளுநர் பதவியெல்லாம் ஒன்றும் அவருக்கு வேண்டாம். அவர் நன்றாக உடல்நலத்தோடு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தா போதும். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேணம். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, பாவம் வேணாம். விட்டுருங்க அவர. அரசியலுக்கு அவர் வர வேண்டாம் நிம்மதியாக இருக்கட்டும் என பேசினார். அவர மீடியா அரசியலுக்கு இழுக்காதிங்க. ஒபிஎஸ் ரஜினி சந்தித்து என்ன பேசினார்கள் என யாருக்குமே தெரியாது. சாப்பிட்டிங்களா குடும்பத்தில் எல்லோரும் எப்படி இருக்காங்க என்று கூட பேசி இருக்கலாம் என பேசினார்.
ரஜினி அடுத்ததாக டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்திற்கு தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ளது. ரஜினியின் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளார். இந்த படம் 2024ல் வெளியிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் வேலைகளிலும் பிசியாக இருந்தார். அவர் படத்தில் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் காணப்படுவார். லால் சலாம் படத்தின் மூலம், ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்குனராக திரும்புகிறார். கிரிக்கெட் மற்றும் கம்யூனிசத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ