சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்யும் ரஜினி?!

நடிகர் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருடன் நடிக்கவுள்ள நடிகை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Mar 15, 2022, 05:11 PM IST
  • ரஜினி 169 கதாநாயகி யார்?
  • ரஜினி 169-க்கு அனிருத் இசை
  • நெல்சன் இயக்கவுள்ள படம்
சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்யும் ரஜினி?! title=

நடிகர் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருடன் நடிக்கவுள்ள நடிகை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்துக்குப் பின் தனது 169ஆவது படத்தில் ரஜினி பிசியாக இருந்துவருகிறார். ‘அண்ணாத்த’ எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் எப்படியும் ‘கம்பேக்’ கொடுத்தே ஆகவேண்டும் என ரஜினி தீவிரம் காட்டிவருவதாகச் சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை இயக்கிவரும் நெல்சன் திலீப்குமார் ரஜினியின் இப்படத்தை  இயக்குகிறார். சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்யை இயக்கிய நெல்சன் அந்த வரிசையில் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கவுள்ளதால் அவரின் கரியர் கிராஃப் சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டுவருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து அவர் இயக்கவுள்ள  இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான சக நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களைத் தேர்வுசெய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் தற்போது  புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Priyanka Mohan Twitter

மேலும் படிக்க | விஜய் 66 படத்தில் ‘விஜய்’ பட ஹீரோயின்?!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம்தான் பிரியங்கா மோகன் தமிழில் ஹீரோயினாக நடித்த முதல் படம். அதன் பிறகு தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது தடவையாக பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.  இந்த நிலையில்தான் ரஜினி படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது. அடுத்தடுத்த படங்கள் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரியங்கா மோகன் நல்ல கவனம் பெற்றுவருவதால் ரஜினி படத்தில் இந்த வாய்ப்பை  அவர் பெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படத்தில் இசையமைத்திருந்த அனிருத்தே இப்படத்துக்கும் இசையமைக்கவுள்ளார்.

மேலும் படிக்க | கமல் படத்தில் ரஜினி பட கனெக்‌ஷன்! - தீயாய் பரவும் அப்டேட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News