இணையத்தில் லீக்கானது 'ஜூலி 2' கவர்ச்சி காட்சிகள்!

2004-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் தான் ‘ஜூலி 2’.இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சஹில் சலாதி, ரவி கிஷென் உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் ஷிவதாசன் இயக்கி உள்ளார்.

Last Updated : Nov 24, 2017, 01:24 PM IST
இணையத்தில் லீக்கானது 'ஜூலி 2' கவர்ச்சி காட்சிகள்! title=

2004-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் தான் ‘ஜூலி 2’.இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சஹில் சலாதி, ரவி கிஷென் உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் ஷிவதாசன் இயக்கி உள்ளார்.

ஒரு சராசரி பெண் மிகப் பெரிய நடிகையாக உருவாக அவள் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படத்தின் கதை என ராய் லட்சுமி குறிப்பிட்டிருந்தார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்தவர் ராய் லட்சுமி. இவருக்கு இது 50_வது படம். இப்படத்தில் ராய் லட்சுமி படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில், இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து படம் வெளியாவதற்கு முந்தைய நாளான நேற்று இப்படத்தில் இடம்பிடித்த படுக்கையறை காட்சிகள், கவர்ச்சிக் காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளன. 

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அதிர்ச்சியுற்றனர். இது குறித்து படத்தின் நாயகி ராய் லட்சுமி கூறியதாவது:

என்ன நடக்கிறது என புரியவில்லை. படத்தின் ரிலீசுக்கு முன்னால் காட்சிகள் லீக்காகி கேலிக்கூத்தாகியிருப்பதை நினைத்து வருந்துகிறேன்.  படக்குழுவினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளனர் என்று கூறினார்.

Trending News