புஷ்பா-2 படத்தில் ராஷ்மிகா இல்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ராஷ்மிகா மந்தனா 'புஷ்பா-2' படத்தின் தொடங்கத்திலேயே இறந்து விடுவார் என்ற செய்திகள் பரவியது குறித்து படத்தின் தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2022, 07:06 AM IST
  • புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • இந்த ஆண்டுக்குள் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.
  • விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
புஷ்பா-2 படத்தில் ராஷ்மிகா இல்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! title=

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.  இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் போன்ற பெரிய நட்சத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர்.  இந்த படத்தின் பாடல்களும், வசனங்களும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்படத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது.  அல்லு அர்ஜுன் நடிப்பிற்கு இந்த படம் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.

மேலும் படிக்க | ட்விட்டரில் தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கும் என்று செய்திகள் வெளியானது.  இந்நிலையில் இதில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்த ராஷ்மிகா கொல்லப்பட்டுவிடுவதாகவும், பின்னர் பாலிவுட் நடிகை ஒருவருடன் ஹீரோ காதல் வயப்படுவார்  என்றும் சில தகவல்கள் வெளியானது.  இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் படத்தின்  தயாரிப்பாளர்கள் இந்த செய்தியை மறுத்துள்ளனர் மற்றும் அவை ஆதாரமற்ற செய்திகள் என்றும் கூறியுள்ளனர்.  

Rashmika

மேலும் படத்தில் ஒரே ஸ்ரீவள்ளி தான் என்றும், படத்தின் முதல் பகுதியில் ராஷ்மிகா அல்லு அரீஜூனின் காதலியாகவும், இரண்டாம் பகுதியில் அல்லு அர்ஜூனுக்கு மனைவியாகவும் இருப்பார், இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.  ராஷ்மிகா தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார்.  'புஷ்பா-2' படத்தின் படப்பிடிப்பு சீனா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.  புஷ்பா 2ம் பாகத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News