விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

விஜய் டிவியின் முகமாக பார்க்கப்படும் தொகுப்பாளினி பிரியங்கா, விவகாரத்து குறித்து பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 23, 2022, 05:06 PM IST
  • பிரபல தொகுப்பாளினி பிரியாங்கா தேஷ்பாண்டே
  • பிக்பாஸூக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்
  • விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசியுள்ளார்
விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா title=

தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக விஜய் டிவி இருக்கிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைக் கடந்து அதில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் தொகுபாளர்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் அவர்களின் நிகழ்ச்சிகளை, அவர்களுக்காகவே பார்க்கும் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. அதில் கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியின் முகமாக மாறியிருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், காமெடி, கலாட்டா மற்றும் அலப்பறைகளை செய்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சியைக் கடந்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். வெடி சிரிப்பு, கிண்டல் கேலிகளை செய்யும் அவர், தன்னை கிண்டல் செய்வதையும் ஜாலியாக எடுத்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று திரும்பி வந்த பிறகு அவர் மீது சிறிது நாட்கள் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தன. அவர் வீட்டிற்குள் நடந்து கொண்ட விதம் பற்றி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். அவற்றையெல்லாம், மீண்டும் தன்னுடைய தொகுப்பாளர் திறமையால் மறக்கடிக்கச் செய்துவிட்டார். பழைய பிரியங்காவாக விஜய் டிவியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனாலும், அவருடைய விவாகரத்து குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. பிரியங்காவும் இதனைப் பற்றி பொதுவெளியில் பேசாததால், இந்த சந்தேகத்தை சிலர் உண்மை என்றுகூட நினைக்கத் தொடங்கினர். 

இருப்பினும் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா. இது தொடர்பாக ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால், அவர்களுக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளத் தேவையில்லை  எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கணவருக்கும் தனக்கும் இடையேயான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News