RJ பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள LKG திரைப்படம் வரும் பிப்., 22-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!
சமீப காலமாக தனது ட்விட்டர் வாயிலாகவும், நேரடியாகவும் சமூக பிரச்சணைகள் குறித்து குரல் கொடுத்து வருபவர் RJ பாலாஜி. இவர் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல் அரசியல் தலைவரை போல் RJ பாலாஜி காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்த பரபரப்பிற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக "தான் அரசியல்வாதியாக நடிப்பதாகவும், இத்திரைப்படத்திற்கு LKG என பெயரிடப்பட்டுள்ளது" எனவும் குறிப்பிட்டிருந்தார். இப்படத்தில் சர்சையான கருத்துகளுக்கு பெயர் போன நாஞ்சில் சம்பத் அவர்கள் RJ பாலாஜிக்கு தந்தையாக நடிப்பதாகவும், நடிகை பிரியா ஆனந்த முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு....! #LKGFromFeb pic.twitter.com/x5LYWFNPh0
— LKG (@RJ_Balaji) February 11, 2019
முன்னதாக இப்படம் கடந்த பொங்கள் தினத்தன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போதிய திரையரங்கு கிடைக்காததால் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 22-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழுவினர் twitter India தலைமையகத்தில் இருந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.