நீதிக்காக போராடும் ஜோதிகா: வெளியானது பொன்மகள் வந்தால் ட்ரைலர்..!

ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது... 

Last Updated : May 21, 2020, 05:30 PM IST
நீதிக்காக போராடும் ஜோதிகா: வெளியானது பொன்மகள் வந்தால் ட்ரைலர்..! title=

ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது... 

சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். JJ ப்ரெட்ரிக் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் R.பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப்போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் இத்திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் அமேசான் பிரைமில் நேரடியாக படத்தை வெளியிட சூர்யா முடிவெடுத்தார். ஆனால் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமேசானில் பிரைமில் படம் வெளியானால் சூர்யா, ஜோதிகா நடிக்கும் படங்களை திரையிடமாட்டோம் என்ற அளவுக்கு எதிர்ப்பு எழுந்தது.

இந்த எதிர்ப்பையும் மீறி நடிகர் சூர்யா படத்தை அமேசான் பிரைமில் வெளியிட துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மே 29-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

Trending News