நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா திரைப்படத்தின் Firstlook போஸ்டரினை திரும்பபெற வேண்டும் என பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்!
சண்டக்கோழி-2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அயோக்யா. இத்திரைப்படதினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த வெங்கட் மோகன் இயக்குகிறார்.
தெலுங்கில் ஜூனியர் NTR, காஜல் அகர்வால் நடித்து வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேகா இப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், KS ரவிக்குமார் ஆகியோர் விஷாலுடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் Firstlook போஸ்டரினை நடிகர் விஷால் வெளியிட்டார். இந்த போஸ்டரில் விஷால் கையில் பீர் பாட்டில் வைத்திருப்பது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கெடுக்கும் வகையில் பீர் பாட்டிலுடன் திரையில் வருவது கண்டிக்கத்தக்கது, என தெரிவித்துள்ள பாமக நிறுவனர், இந்த போஸ்டரினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த சர்கார் திரைப்பட FirstLook போஸ்டரில் நாயகன் விஜய் சிகரெட் உடன் காட்சியளித்தார். இந்த புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக, போஸ்டரினை திரும்ப பெறச்செய்தது. இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் போஸ்டருக்கும் பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2018
‘அயோக்யா’ திரைப்படவிளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2018