பேட்ட படத்தில் சசிகுமார் யார்? அவரின் பெயர் என்ன? படக்குழு அறிவிப்பு

"பேட்ட படத்தில் நடித்து வரும் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரின் தோற்றமும், பெயரும் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2018, 05:11 PM IST
பேட்ட படத்தில் சசிகுமார் யார்? அவரின் பெயர் என்ன? படக்குழு அறிவிப்பு title=

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 

பேட்ட படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வரும் பொங்கலுக்கு திரைக்கு வர தயாராக உள்ளது. ஏற்கனவே ரஜினியின் மிகப்பெரிய ரசிகனான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது தலைவனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரஜினியின் பிறந்த நாளில் 'பேட்ட' படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

 

இந்தநிலையில், இன்று "பேட்ட படத்தில் நடித்து வரும் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரின் தோற்றமும், பெயரும் வெளியாகியுள்ளது. இதில் மாலிக் என்ற பெயரில் சசிகுமார் நடித்து உள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தில் விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக்கின் தோற்றமும், பெயரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News