"பேட்மேன்" திரைப்படம் இரண்டாம் நாளில் 23.94 கோடி வசூல்!!

அக்ஷய் குமாரின் "பேட்மேன்" திரைப்படம் இரண்டாம் நாளில் 23.94 கோடி வசூல் படைத்துள்ளது.

Last Updated : Feb 12, 2018, 01:08 PM IST
"பேட்மேன்" திரைப்படம் இரண்டாம் நாளில் 23.94 கோடி வசூல்!! title=

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், பெரும் எதிர்பார்புகளுடன் வெளியான திரைப்படம் பேட்மேன்.

பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்திருக்கும் பால்கி இப்படத்தினை இயக்கியுள்ளார்.

பெண்களுக்கான மலிவு விலை சுகாதார பட்டை (cheap sanitary pads), உருவாக்கிய தமிழர் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை கதையாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இதில், பெண்களின் மாதவிடாய் பிரச்சணைகளை குறித்து படமாக்கப்பட்டுள்ளது. ஆர் பால்கி இயக்கிய இந்த படத்தில் ராதிகா ஆப்டே மற்றும் சோனம் கபூர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் வசூல் ரூ. 10.26 கோடி பெற்று இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், பேட்மேன் இரண்டாம் நாளில் 23.94 கோடி வசூல் படைத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 10.26 கோடி மற்றும் சனிக்கிழமை 13.68 கோடி வசூல் படைத்த பேட்மேன் வார இறுதியில் ரூ. 50 கோடி ரூபாய் வசூளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News