ஜெயிலர் படம் தொடர்பாக ரசிகர்களுக்கு சோகமான செய்தி! ஓடிடி கவலை எப்போது முடியும்?

Jailer Postponed: ஜெயிலர் படத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம்! ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போக காரணம் என்ன? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 31, 2023, 02:53 PM IST
  • ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போக காரணம் என்ன?
  • பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை
  • ஜெயிலர் படத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு
ஜெயிலர் படம் தொடர்பாக ரசிகர்களுக்கு சோகமான செய்தி! ஓடிடி கவலை எப்போது முடியும்? title=

சென்னை: பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற "ஜெயிலர்" இன் மகத்தான வெற்றிக்கு மத்தியில், தற்போது ஜெயிலர் ரிலீஸ் தொடர்பான மற்றொரு தகவல் வைரலாகிறது. ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களில், குறிப்பாக நெட்ஃபிக்ஸில் செப்டம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருந்த ஜெயிலர் திரைப்படம் அன்று வெளியாகமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கூறப்படுகிறது. 100 கோடி ரூபாய்க்கு "ஜெயிலர்" உரிமையை Netflix பெற்றுள்ளதாக பொழுதுபோக்கு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமன்றி உலகளவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். 

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம்

இந்தச் செய்தி படத்தின் டிஜிட்டல் அறிமுகத்தைப் பற்றிய குறிப்புகளைக் காட்டினாலும், திரையரங்குகலின் வெள்ளித்திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நெட்ஃபிளிக்ஸில் தற்போது வெளியாவது திரைப்படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், ஜெயிலரின் ஆன்லைன் பிரீமியர் ஒத்திவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | Jawan: அனிருத்துடன் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

இருப்பினும், இந்தியன் பிரீமியர் லீக்கில் ஒரு முக்கிய அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஜெர்சி அணிந்த ஒரு கதாபாத்திரத்தை சித்தரிக்கும் காட்சி, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது. இந்த சித்தரிப்பு கவலைகளை எழுப்பியதுடன் RCB சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்க தூண்டியது. தங்கள் பிராண்டின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டை மேற்கோள் காட்டிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ரஜினிகாந்தின் படங்களுக்கு கிடைக்காத அமோக வரவேற்றுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வசூலில் மகத்தான சாதனைகளை புரிந்துள்ளது.  வருகிறது. கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததே தவிர, விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில் திரையரங்கில் வெளியானதிலிருந்து, “ஜெயிலர்” ஒரு இடைவிடாத சாதனையை முறியடித்து வருகிறது. வெறும் 19 நாட்களில் இந்திய அளவில் ரூ.300 கோடி வசூல் செய்த படம், உலகளவில் ரூ.600 கோடி வசூல் செய்து வியக்க வைக்கிறது.

ஜெயிலர் திரைப்பட நட்சத்திரங்கள்

ஜெயிலர் படத்தில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட திரையுலகத்தை சேர்ந்த நடிகர் சிவராஜ் குமார், தமன்னா உள்ளிட்டோர் ஜெயிலர் திரைப்படத்தில்ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார். 

ஜெயிலர் இரண்டாம் பாகம் 

ஜெயிலர் படம் வெளியான புதிதில் இப்படத்திற்கு இரண்டாம் பாகம் இருப்பதாக ஒரு தகவல் கிளம்பியது. இதில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை யாரும் உறுதி செய்யவில்லை. எனவே, முதல் பாகத்தை ஓடிடியில் பார்த்து ரசியுங்கள்.

மேலும் படிக்க | Kalki 2898 AD: பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இணைந்த புதிய பிரபலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News