Oscars 2021: சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிடும் ‘ஜல்லிக்கட்டு’

2021 ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்களில் இந்தியாவின் சார்பில்  ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் அனுப்பப்படும். ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2020, 08:59 PM IST
  • எஸ்.ஹரீஷின் Maoist என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு ஆர்.ஜெயக்குமாருடன் எஸ்.ஹரீஷும் திரைக்கதை எழுதியுள்ளார்
  • ஜல்லிக்கட்டு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரிக்கு கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50வது சர்வதேச சினிமா விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது கொடுக்கப்பட்டது
Oscars 2021: சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிடும் ‘ஜல்லிக்கட்டு’ title=

2021 ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்களில் இந்தியாவின் சார்பில்  ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் அனுப்பப்படும். ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது.

ஆஸ்கரில் நுழைவு பெற்றிருக்கும் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தை இயக்கியவர் பிரபல மலையாள சினிமா இயக்குநர் லிஜோ ஜோஸ் (Lijo Jose Pellissery). 2019ம் ஆண்டு வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் கதை ஒரு எருமையைச் (buffalo) சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அது வெட்டப்படுவதற்கு முன்னதாக உரிமையாளரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரத்தின் வழியாக ஓடுகிறது. 

எஸ்.ஹரீஷின் (S Hareesh) மாவோயிஸ்ட் (Maoist) என்ற  சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு ஆர்.ஜெயக்குமாருடன்,  எஸ்.ஹரீஷும் திரைக்கதை எழுதியுள்ளார். ஜல்லிக்கட்டு மலையாள திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படுவது குறித்த அறிவிப்பை இந்திய திரைப்பட கூட்டமைப்பின் (committee of the Film Federation of India)   தலைவர் ராகுல் ரவைல் (Rahul Rawail) வெளியிட்ட்டார். 

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், “இது மனிதர்களிடையே நிலவும் அடிப்படை பிரச்சனைகளை வெளிப்படுத்துகிறது. திரைப்படத்தைப் பார்க்கும்போது ஏற்பட்ட உணர்வுகள் உண்மையில் அனைவரையும் அசைத்துவிட்டன. இந்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தில், கதாபாத்திரங்கள் தனித்துவமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் அனைவருமே உணர்ந்தோம்” என்று தெரிவித்தார்.  

ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரிக்கு கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50வது சர்வதேச சினிமா விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது.   

The Sky is Pink, Gunjan Saxena, Shakuntala Devi, Gulabo Sitabo, Chippa, Chhalaang, The Disciple, Shikara, Bittersweet, Is Love Enough, Sir, Moothon, Kalira Atita, Bulbbul, Kaamyaab, Chintu Ka Birthday, The Check Post, Eeb Allay Ooo, Bahattar Hoorian, Malang, Bhavai, AK Vs AK, Chhapaak, Bhonsle, Serious Men, I Pad and Atkan Chatkan என 26 திரைப்படங்கள் இந்தப் பிரிவில் போட்டியிட்டன.  ஜல்லிக்கட்டுக் காளை, போட்டியில் முந்தி, சர்வதேச அளவில் சென்றுவிட்டது.  

ஆஸ்கார் 2021: 93 வது அகாடமி விருதுகள் விழா 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளன. 2019 ஆம் ஆண்டில், இந்திய திரைப்படக் கூட்டமைப்பு குழு 2020 ஆஸ்கர் விருதுக்கு சோயா அக்தரின் ‘Gully Boy’ திரைப்படத்தை தேர்வு செய்தது. 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News