கருப்பன் திரைப்படம்: விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்!

Last Updated : Jul 16, 2017, 09:28 AM IST
கருப்பன் திரைப்படம்: விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்! title=

கருப்பன் திரைப்படத்தில் கொம்பன் காளை தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி காளை உரிமையாளர் திருச்சி மாவட்டம் லால்குடியில் பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கொம்பன் என்ற ஜல்லிக்கட்டுக் காளையை நடிகர் விஜய் சேதுபதி அடக்குவது போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதை கண்டு கொம்பன் காளையின் ஜல்லிக்கட்டு வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கொம்பன் காளையை அடக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் காளையின் உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Trending News