மே 18-ம் தேதிக்கு பதிலாக மே 11-ம் தேதி விவேகம் டீசர் வெளியிடப்படும்

Last Updated : May 5, 2017, 04:17 PM IST
மே 18-ம் தேதிக்கு பதிலாக மே 11-ம் தேதி விவேகம் டீசர் வெளியிடப்படும் title=

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விவேகம். கடந்த பிப்ரவர் 2-ம் தேதி இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அடிக்கடி அஜித்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தனர் படக்குழு.

இந்நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் டீசர் வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்று இரவு இயக்குனர் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் டீசர் வெளியீட்டு அறிவிப்பு அறிவித்தார். மே 18-ம் தேதி வியாழக்கிழமை, வழக்கம் போல 12.01 மணிக்கு விவேகம் படத்தின் டீசர் வெளியாக உள்ளது என அவர் கூறியிருந்தார்.

 

 

ஆனால் தற்போது விவேகம் படத்தின் டீசரை முன்கூட்டிய வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மே 18-ம் தேதிக்கு பதிலாக மே11-ம் தேதி டீசர் வெளியிட பட உள்ளதாக இயக்குனர் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

 

இந்த படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார்.

Trending News