தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் சுடர் கம்பெனி கம்பெனியாக ஏறி வேலை தேட எங்கும் வேலை கிடைக்காமல் போகிறது. மறுபக்கம் வேலைக்காரியிடம் பயப்படாதீங்க என் கிட்ட ஃப்ரீயா பேசுங்க நானும் மனோகரியோட ஆள் தான். அந்த நாலு பசங்க எப்படி என விசாரித்து கொண்டிருக்கும்போது இதையெல்லாம் நான் குகுழந்தைகளும் கேட்டு விடுகின்றனர்.
மேலும் படிக்க | கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!
பிறகு கேர் டேக்கர் பெண்மணி சேரில் உட்கார்ந்து இருக்கும்போது அந்த ஸ்டூலில் கயிறு கட்டி இழுத்து கீழே தள்ளி விடுகின்றனர். பிறகு அஞ்சலி விளையாடிக் கொண்டிருக்கும் போது ஓடி வந்து இடித்துவிட அவளைப் பிடித்து கேர் டேக்கர் பெண்மணி கிள்ளி விடுகிறாள். இதைப்பார்த்து இன்னொரு பெண் என் தங்கச்சியைஎதுக்கு கிள்ளுற என சத்தம் போட அவளை அடிக்க வர அபி அதை பார்த்து கோபப்படுகிறாள்.
இந்த நேரம் பார்த்து எழில் வீட்டுக்கு வந்துவிட கேர் டேக்கர் பெண்மணி நல்லவள் போல் நடிக்க எழில் பிள்ளைகள் மீது தான் தப்பு என நினைத்து தண்டனை கொடுப்பது மட்டுமல்லாமல் அபியை மன்னிப்பு கேட்க சொல்லி சத்தம் போட்டு மன்னிப்பு கேட்க வைக்கிறான். இதைத் தொடர்ந்து கவின் மேட்டுக்கு கீழே கோலி குண்டுகளை அடுக்கி வைத்து கேர் டேக்கர் பெண்மணியை கீழே விழ வைக்கிறான்.
மறுபக்கம் வேலை தேடி களைப்பாக ஹாஸ்டலுக்கு வரும் சுடர் தள்ளுவண்டி கடையை பார்த்து விலையைக் கேட்டு ஒரே ஒரு தோசை மட்டும் கொடுக்க சொல்ல அப்படி எல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லி விட தண்ணீர் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து நகர்கிறாள்.
இதைப் பார்த்த கடைக்கார பாட்டி உன் கண்ணுல பசி தெரியுது நீ காசு எல்லாம் கொடுக்க வேண்டாம் என நான்கு இட்லி வைத்து கொடுக்க அதை சாப்பிட்ட சுடர் பாட்டிக்கு கைமாறாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகளை துலக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீதமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | தனுஷ் 51 படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு..பரபரப்பை ஏற்படுத்திய படக்குழு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ