மாஸ் லுக் அஜித்!! தல 59 படத்தின் தலைப்பு நேர்கொண்ட பார்வை

தல 59 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 5, 2019, 08:57 AM IST
மாஸ் லுக் அஜித்!! தல 59 படத்தின் தலைப்பு நேர்கொண்ட பார்வை title=

"விஸ்வாசம்" படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’  படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும், திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளையும், கே.கதிர் கலை பணிகளையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள்.

இது தல அஜித்தின் 59வது படமாகும். தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் "நேர்கொண்ட பார்வை"

 

 

Trending News