Navarasa Teaser: 9 கதைகள், 9 உணர்வுகள்; நவரசா டீசர்!

நவராசா வரும் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2021, 01:48 PM IST
  • நவராசா வரும் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்
  • இதில் சூர்யா - கௌதம் மேனன் கூட்டணியிலான பகுதியும் உள்ளது.
  • நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது
Navarasa Teaser: 9 கதைகள், 9 உணர்வுகள்; நவரசா டீசர்! title=

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கி உள்ள ஆந்தாலஜி வெப் தொடர் நவரசா. நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் நவரசா (Navarasa) ஆந்தாலஜி வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். மேலும் இதில், சூர்யா (Suriya), விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ALSO READ | Navarasa Release: ஆகஸ்ட்டில் வெளியாகிறது நவரசா, முழு அப்டேட் இதோ

ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையடுத்து நவரசா ஆகஸ்ட் 6-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

நவரசங்கள் என்பது மனிதனின் ஒன்பது உணர்வுகளை குறிப்பது. இந்த உணர்வுகளை அடிப்படையாக வைத்து ஒன்பது குறும்படங்களை ஒன்பது பேர் இயக்கியுள்ளனர். அதன் தொகுப்பே நவரசா ஆந்தாலஜி என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வலைத்தொடர் மற்றும் திரைப்படங்களை சந்தா இல்லாமல் Netflix-ல் இலவசமாகப் பாருங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News