நடிகர் சங்கம் அடிக்கல் நாட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

Last Updated : Mar 31, 2017, 03:09 PM IST
நடிகர் சங்கம் அடிக்கல் நாட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு title=

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை துவங்கியது.

இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல் ஹாஸனும் விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

ரூ. 26 கோடியில் கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடம் 4 மாடிகளை கொண்டதாக இருக்குமாம். கட்டிடம் கட்ட நடிகர்கள் விஷாலும், கார்த்தியும் தலா 5 கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். 

நடிகர் சங்க கட்டிடம் மூலமாக வரும் வருமானத்தில் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்யப்படும். 

1952ல் முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர், மற்றும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News