ரத்தக்கண்ணீர் படத்திற்காக எம்.ஆர்.ராதா வாங்கிய சம்பளம்; இவ்வளவா

MR RADHAS RATHA KANNEER: ரத்தக்கண்ணீரில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட நிபந்தனைகள் மற்றும் சம்பள விவரத்தின் முழு விவரம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 7, 2022, 11:09 AM IST
  • கே.பி.சுந்தராம்பாளை விட சம்பளம் அதிகம்
  • ரத்தக்கண்ணீர் பட வெளியீடு
  • எம்.ஆர்.ராதா போட்ட நிபந்தனைகள்
ரத்தக்கண்ணீர் படத்திற்காக எம்.ஆர்.ராதா வாங்கிய சம்பளம்; இவ்வளவா title=

ரத்தக்கண்ணீர் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். எஸ். ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சி எஸ் ஜெயராமன் இசை அமைத்திருந்தார். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. 

இந்நிலையில் தற்போது ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம் ஆர் ராதா போட்ட நிபந்தனைகள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதன்படி இந்த படத்திற்கு எம் ஆர் ராதா போட்ட நிபந்தனைகள் என்னவென்று விரிவாக காண்போம்.

மேலும் படிக்க | விஜய்யுடன் தீராத மனக்கசப்பு... ஆத்திரத்தின் உச்சியில் எஸ்.ஏ.சி?

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் எம் ஆர் ராதா. இவர் படத்தில் பல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஒரு புகழ்பெற்ற மேடை நாடக நடிகரும் ஆவார். அதன்படி இவர் ரத்தக்கண்ணீர் படத்தில் நடிப்பதற்கு சில நிபந்தனைகள் போட்டார். வேறொருவர் என்றால் அந்த நிபந்தனைக்கு தலைதெறிக்க ஓடி இருப்பார். அவர் போட்ட நிபந்தனை, சினிமாவில் நடித்தாலும் நாடகத்தை விட மாட்டேன். நாடகம் வழக்கம் போல நடக்கும். அது முடிந்த பிறகுதான் வந்து நடிப்பேன்.

அதேபோல் அப்போது அவ்வையார் படத்துக்காக கே பி சுந்தராம்பாள் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. எனவே தனக்கு கே பி சுந்தராம்பாள் வாங்குவதைவிட 25000 சேர்த்து கொடுங்க என்று அவர் கேட்டார். இதற்கு படத்தின் தயாரிப்பாளர் பெருமாளும் சம்மதித்தார். அதனை தொடர்ந்து படத்தினுடைய வேலைகள் விறுவிறுவென்று நடைபெற்றது.

அதேபோல் தாசி காந்தா கதாபாத்திரத்தில் நடிக்க யாரும் முன்வராததால் புதுமுகம் ஒருவரை ஒப்பந்தம் செய்தார்கள். அவர்தான் எம்.என்.ராஜம். பிறகு இந்த படத்தின் வேலைகள் மளமளவென நடந்தன. நாடகத்தின் கதை, வசனகர்த்தா திருவாரூர் தங்கராசுவே சினிமாவுக்கும் வசனம் எழுதுவது என தீர்மானமானது. 

ரத்தக்கண்ணீர் 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. குறிப்பாக, படத்தில் ராதாவின் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய்யை கலாய்த்துவிட்டு தற்போது நன்றி கூறும் கோமாளி இயக்குனர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News