’சினிமா துறையின் பூலோகம்’ மத்திய பிரதேசத்துக்கு தேசிய விருது! ஸ்பெஷல் இதுதான்

National Film Awards 2022: திரைப்படத்துறைக்கு சாதகமான மாநிலத்துக்கான தேசிய விருது மத்திய பிரதேச மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. அங்கு இருக்கும் சூட்டிங் ஸ்பாட்டுகள் தான் அதற்கு காரணம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 22, 2022, 07:46 PM IST
  • மத்திய பிரதேசத்துக்கு கிடைத்திருக்கும் தேசிய விருது
  • சினிமா துறைக்கு உகந்த மாநிலமாக கவுரவிப்பு
  • உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்ளுக்கு சிறப்பு விருது
’சினிமா துறையின் பூலோகம்’ மத்திய பிரதேசத்துக்கு தேசிய விருது! ஸ்பெஷல் இதுதான் title=

National Film Awards 2022: ’ஸ்டார்... ஆக்ஷன் ... கேமரா’ இந்த வார்த்தை மத்திய பிரதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கும் ஒரு வார்த்தை. அம்மாநில மக்களுக்கு பழகிப்போன வார்த்தையும் கூட. ஏனென்றால், இந்தியாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களின் சூட்டிங் அம்மாநிலத்தில் தான் நடைபெறுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் முதல் அழகிய எழில் கொஞ்சும் இயற்கை பிரதேசங்கள், பள்ளத்தாக்குகள் வரை என அங்கு இல்லாத லொகேஷன்களே இல்லை எனக் கூறலாம். ஒரு இயக்குநரின் கற்பனைக்கு எட்டும் அனைத்து இடங்களையும் அங்கு பார்த்துவிடலாம். 

மேலும் படிக்க | மேனேஜரால்தான் சூர்யாவுக்கு தேசிய விருதா?... சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை

வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் என்றால் கஜுராஹோ மற்றும் சாஞ்சி நிலம், கன்ஹா மற்றும் பாந்தவ்கர் காடுகள், குவாலியர், ஓர்ச்சா மற்றும் மண்டுவின் கோட்டைகள், நினைவுச்சின்னங்கள் என சினிமா துறையினருக்கான ரியல் பூலோகமாக இருக்கிறது. கலாச்சார இடங்கள் என்றால் போபால், இந்தூர், ஜபல்பூர் மற்றும் குவாலியர் ஆகிய இடங்களைத் தான் பாலிவுட் முதல் கோலிவுட் வரை இருக்கும் திரைத்துறையினர் தேர்ந்தெடுக்கும் இடங்கள். அழகான ஆறுகள், பசுமையான காடுகள், பள்ளத்தாக்குகள், நர்மதை நதிக்கரை என திரும்பிய இடங்களெல்லாம் சூட்டிங் ஸ்பாட்கள் தான். பாலிவுட் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஒரு இடம் என்றால், அது போபால். அங்கு தினமும் ஒரு படத்தின் சூட்டிங்காவது நடைபெறும். 

இது மட்டும் தான் அங்கு ஸ்பெஷலா என்றால் இல்லை. சினிமா துறையினருக்கு மாநில அரசு கொடுக்கும் நிதிச் சலுகை, மானியம் ஆகியவையும் சினிமா துறையினரை அங்கு நோக்கி இழுக்கிறது. இதற்காக மத்தியப்பிரதேசத்தில் 2020 ஆம் ஆண்டு ஸ்பெஷல் கொள்கை விளக்க குறிப்பே வெளியிடபட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சீரியல்கள், வெப் சீரிஸ், ஆவணப் படங்கள், திரைப்படங்கள் என நூற்றுக்கணக்கான சூட்டிங்குகள் மத்திய பிரதேசத்தில் நாள்தோறும் நடைபெறுகின்றன. தமிழில் விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் சில முக்கிய காட்சிகள் கூட மத்திய பிரதேசத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ’நாயகன் மீண்டும் வர’ விக்ரம் பீஜிஎம்மில் சூர்யாவுக்கு குவியும் வாழ்த்து - Video

இதனைக் கருத்தில் கொண்டே சினிமா துறைக்கு சாதகமான மாநிலத்துக்கான தேசிய விருது மத்திய பிரதேசத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் இருக்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் மாநிலங்களுக்கு சிறப்பு விருதுகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News