விஜய்க்கு எதிராக கிளம்பிய மோகன் லால் ரசிகர்கள்..! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottLeo!

Boycott Leo: லியோ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் #BoycottLeo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Sep 23, 2023, 05:18 PM IST
  • லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
  • இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிறது.
  • இதை ட்ரெண்ட் செய்தது மோகன்லால் ரசிகர்கள்.
விஜய்க்கு எதிராக கிளம்பிய மோகன் லால் ரசிகர்கள்..! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottLeo!  title=

விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதை தொடர்ந்து, பிரபல நடிகர் மோகன் லாலின் ரசிகர்கள் பலர், இந்த படத்திற்கு எதிராகவும் விஜய்க்கு எதிராகவும் கண்டன குரல்களை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். 

லியோ திரைப்படம்:

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து பணிபுரிந்திருக்கும் படம், லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மாத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், ரிலீஸாவதற்கு முன்னரே வியாபாரத்தில் பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது. காஷ்மிர் மற்றும் சென்னையில் நடைப்பெற்ற லியோ படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. லியோ படத்தின் போஸ்டர்களை லியோ படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். 

போஸ்டர்கள் வெளியீடு:

லியோ படம், தமிழ் மொழி மட்டுமன்றி இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதன் காரணமாக, 7 ஸ்கரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு போஸ்டரை வெளியிட்டு வந்தது. சமீபத்தில் இந்தி போஸ்டர் வெளியானது. அதில் நடிகர் விஜய் சஞ்சய் தத்தின் கழுத்தை பிடிப்பது போன்ற போட்டோ இடம் பெற்றிருந்தது. இதனால், படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | லியோ படத்துடன் மோதும் டாப் 2 ஸ்டார்களின் படங்கள் - அப்போ பாக்ஸ் ஆஃபீஸ்?

ட்விட்டரில் வைரலான ஹேஷ்டேக்..

லியோ படத்தில் பான் இந்திய அளவில் பெரிய நடிகர்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு இந்திய அளவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக தென்னிந்திய ரசிகர்கள் இதனை பெரிதாக எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான் நேற்றிலிருந்து திடீரென்று, #BoycottLeo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது. அதிலும், ‘லாலேட்டன்’ என்று ரசிகர்களால் பெரிதும் அழைக்கப்படும் மோகன்லாலின் ரசிகர்கள்தான் இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்தனர். 

காரணம் என்ன..? 

விஜய் ரசிகர்கள் சிலர் காரணமே இல்லாமல் நடிகர் மோகன் லாலை கலாய்த்து மீம்ஸ்களையும் ட்வீட்களையும் பதிவிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே ட்விட்டர் எக்ஸ் தளத்தில் #BoycottLeo ஹேஷ்டேக் ட்ரெண்டாக காரணம் என்றும் சொல்லப்படு்கிறது. விஜய் ரசிகர்களின் இந்த செயலால் டென்ஷனான மோகன்லால் ரசிர்கள், இந்த ஹேஷ்டைக்கை ட்ரெண்ட் செய்து லியோ படத்தை புறக்கணிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் கூட்டம்..

தமிழ் நடிகர்கள் பலருக்கு கேரளாவில் பெருமளவு ரசிகர் கூட்டம் உள்ளது. விஜய்க்கும் கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது எந்த படம் கேரளாவில் வெளியானாலும் அது கண்டிப்பாக ஹிட் ஆகும். அந்த அளவிற்கு பெருமளவு ரசிகர் கூட்டம் கொண்டுள்ள விஜய்க்கு இப்படியொரு நிலையா என ரசிகர்கள் குமுறி வருகின்றனர். ன

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா:

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. படம், அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | 'லியோ' படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்யுமா? லோகேஷ் கனகராஜ் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News