பிரம்மாண்ட வீடு, ராணி வாழ்க்கை.. ரோஜாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

தென்னிந்திய திரை உலகில், 90s காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு விபரமும் வெளியாகி பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 4, 2023, 09:48 AM IST
  • நடிகை ரோஜா தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்.
  • ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
  • இவருக்கு ஹைதராபாத் மற்றும் சென்னையில் அரண்மனை போல் வீடு உள்ளது.
பிரம்மாண்ட வீடு, ராணி வாழ்க்கை.. ரோஜாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு? title=

ரோஜாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு: தென்னிந்திய திரை உலகில், 90s காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு விபரமும் வெளியாகி பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

நடிகை ரோஜா:
90களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை ரோஜா (Actress Roja) தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். நடிகை ரோஜா 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ஆந்திரா மாநிலம், திருப்பதியில் நாகராஜ ரெட்டி மற்றும் லலிதா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பொலிட்டிக்கல் சயின்ஸ் முடித்த நடிகை ரோஜா சினிமாவில் வருவதற்கு முன் குச்சுப்புடி நடனக்கலைஞராக இருந்தார்.

மேலும் படிக்க | அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு? அட, இத்தனை கோடியா? 

இதையடுத்து,1991 ஆம் ஆண்டு 'பிரேம தப்பாஸு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அதன் பின் செம்பருத்தி படத்தில் நடித்த ரோஜா இயக்குநர் செல்வமணி காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். இவர் 1991 முதல் 2002 வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் ஒரு சில கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார், மேலும் இவர் ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

இவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதற்காக திரைப்படத் துறையை விட்டு விலகுவதாக ரோஜா அறிவித்தார். இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

 

ரோஜாவின் அரசியல் வாழ்க்கை:
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா, 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

ரோஜாவின் சொத்து மதிப்பு:
இந்நிலையில் தற்போது நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், அவரின் மொத்த சொத்து மதிப்பு, 80 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவருக்கு ஹைதராபாத் மற்றும் சென்னையில் அரண்மனை போல் வீடு உள்ளது.

அண்மையில் நடிகை ரோஜா ஹோம் டூர் வீடியோவை போட்டு பலரையும் வாயடைக்க வைத்தார். அது மட்டுமல்ல இவரிடம் ஆடம்பரமான சொகுசு கார்களும் உள்ளது.

மேலும் படிக்க | “கட் அடிக்கலாம் பிட் அடிக்கலாம்.. இதை மட்டும் பன்னாதீங்க” மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அறிவுரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News