முன்னாள் ஹீரோயினின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப்போகும் விஜய்

தன்னுடன் நடித்த முன்னாள் ஹீரோயினின் எதிர்பார்ப்பை உடனே நிறைவேற்ற உள்ளார் நடிகர் விஜய்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 30, 2022, 05:08 PM IST
  • விரைவில் வெளியாகும் பீஸ்ட் டிரெய்லர்
  • நடிகை மீரா ஜாஸ்மினின் எதிர்பார்ப்பு இதுதான்
  • விஜய் கட்டியணைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
முன்னாள் ஹீரோயினின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப்போகும் விஜய் title=

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.  நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. புனித வெள்ளி, சித்திரை திருநாள் மற்றும் வார விடுமுறை என வரிசையாக வரும் விடுமுறை தினங்களைக் குறிவைத்து படம் ரிலீஸாக உள்ளதால் வசூல் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரிலீஸான ஜாலிலிலோ ஜிம்கானா மற்றும் அரபிக் குத்து ஆகிய இரு படால்களும் யூ டியூபை கலங்கடித்துள்ளன. குறிப்பாக அரபிக்குத்து பாடல் உலகளவில் டிரெண்டிங் ஆனது. இதுவரை 180 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் அப்பாடல் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் பிஸ்னஸ் சீக்ரெட்

இந்த இரு பாடல்களும் படம் ரிலீஸாவதற்கு முன்பே ஹிட்டாகி இருக்கும் நிலையில், படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறவைத்தன. துப்பாக்கியோடு விஜய் இருக்கும் புகைப்படங்கள், பொறி பறக்க வைப்பதால் நிச்சயம் இப்படம் ஆக்ஷன் பேக் படமாக இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.  கேஜிஎப் 2 டிரெய்லர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் உடனே விஜய்யின் பீஸ்ட் டிரெய்லர் அப்டேட்டை கேட்கத் தொடங்கினர். அவர்களுக்கு பதில் அளித்த நெல்சன், இன்று டிரெய்லர் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்தார். 

கேஜிஎப் 2 டிரெய்லருக்கு இணையாக பீஸ்ட் டிரெய்லர் இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  ஏனென்றால், ஏப்ரல் 14 ஆம் தேதி, அதாவது பீஸ்ட் ரிலீஸாவதற்கு அடுத்த நாள் தான்‘கேஜிஎப்2’ ரிலீஸாகிறது. இப்படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்த நிலையில், 2வது பாகத்தின் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அடுத்தடுத்த நாளில் இரு படங்களும் வெளியாவதால் ஏற்கனவே பீஸ்ட் vs கேஜிஎப்2 என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இரு படங்களில் வசூல் சாதனை படைக்கப்போகும் படம் எது? என்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணமாகும். 

ஆனால், கேஜிஎப் 2 புரோமோஷனில் பங்கேற்ற யாஷ்,  பீஸ்ட் மற்றும் கேஜிஎப்2 என இருபடங்களையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனிடையே, விஜயின் முன்னாள் ஹிரோயினியான மீரா ஜாஸ்மின், விஜய் தன்னை கட்டியணைத்திருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு பீஸ்ட் டிரெய்லர் மற்றும் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த எதிர்பார்ப்பில் ஒன்றான டிரெய்லர் இன்று மாலையே பீஸ்ட் படக்குழு வெளியிட உள்ளது.

மேலும் படிக்க | ராஜமெளலியை நிஜமாகவே Unfollow செய்தாரா ஆலியா பட்?!- உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News