தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: “மே 22 ஒரு சம்பவம்” என்ற தலைப்பில் படமாகிறது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குனர் சந்தோஷ் கோபால் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 28, 2019, 09:19 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: “மே 22 ஒரு சம்பவம்” என்ற தலைப்பில் படமாகிறது! title=

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குனர் சந்தோஷ் கோபால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் (கடந்த மே 22) 100-வது நாளில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். இதில் ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாகிறது. இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் கோபால் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு "மே 22 ஒரு சம்பவம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அஹிம்சா புரடக்‌ஷன்ஸ் சார்பில் "மே 22 ஒரு சம்பவம்" உருவாகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சுவிட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

Trending News