கர்ணன் பாணியில் நடிகர் சூர்யா: மாஸ் தகவல் வெளியீடு!

சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு அடுத்ததாக சூர்யா தற்போது சூர்யா 40 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2021, 01:31 PM IST
கர்ணன் பாணியில் நடிகர் சூர்யா: மாஸ் தகவல் வெளியீடு! title=

சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு அடுத்ததாக சூர்யா தற்போது சூர்யா 40 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கொரானா தொற்று காரணமாக ஓய்வில் இருந்த சூர்யா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கு பெற்றுள்ளார்.

இந்த படத்தை (Suriya 40) இயக்குனர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ALSO READ | சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்?

முன்னதாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் சூர்யா இல்லாமல் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது தற்போது மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் சூர்யா40 படத்தில் கலந்து கொண்டுள்ளார் சூர்யா. வந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் துப்பாக்கி வைத்திருப்பது போல வெளியான முதல் போஸ்டரை தொடர்ந்து தற்போது தனுஷின் கர்ணன் ஸ்டைலில் கையில் வாலை வைத்துக்கொண்டு நடந்து செல்லும் சூர்யாவின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

ALSO READ | சூர்யா வா இது? இணையத்தில் வைரலாகும் மாஸ் ஓ மாஸ் புகைப்படம்!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News