பொழுதுபோக்கு செய்தி: நாடு முழுவதும் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், தென் இந்திய மொழித் திரைப்படங்கள் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வரும் முக்கிய தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல் இதோ.
வலிமை
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான அஜித் குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் படம் "வலிமை" பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால் கோவிட் நோய்த்தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக படம் ரீலிஸ் செய்வது தள்ளி வைக்கப்பட்டது. அஜித் குமாரின் "வலிமை" எப்பொழுது வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தகவலுக்காக காத்திருக்கும் நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுத்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இந்நிலையில், இப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பீஸ்ட்
மாஸ்டர் படத்தின் வெற்றியை அடுத்து விஜய் நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் "பீஸ்ட்" படத்தின் வெளியீட்டு தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால் எந்த தேதி என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 28 அன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இப்போது "பீஸ்ட்" படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் "பீஸ்ட்" ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்கும் துணிந்தவன்
இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் முதல் படம் இதுவாகும். பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் படியுங்கள்: பீஸ்ட் முதல் பாடல்! அதிகாரபூர்வ அறிவிப்பு!
டான்
சென்னையில் நடைபெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டபோது, அவருடைய டான் திரைப்படம் எஸ்.எஸ். ராஜமௌலி படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதும் என்று நினைத்திருக்க மாட்டார். "ஆர்ஆர்ஆர்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக மார்ச் 25 அன்று "டான்" படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்தார். சிவகார்த்திகேயன் "டான்" வெளியீட்டை நிறுத்தி வைப்பாரா அல்லது அதை வேறு ஒரு தேதிக்கு மாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆர்.ஆர்.ஆர்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் தயாரிப்பாளர்கள் முன்னதாக மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆகிய தேதிகளை குறிவைத்திருந்தனர். இந்தத் தேதிகளில் ஒன்றில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அவர்கள் அறிவித்தனர். "ஜேம்ஸ்" படம் மார்ச் 17 ஆம் தேதி வெளியீடப்படும் எனத் அறிவிக்கப்பட்டதால், ஆர்.ஆர்.ஆர் படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடலாம் என நினைத்தன்ர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் மற்ற பெரிய படங்களும் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், மார்ச் 25 இல் ஆர்.ஆர்.ஆர் படம் ஒரு சிறந்த தேர்வாக இருந்தது.
மேலும் படியுங்கள்: ’தியேட்டர் திருவிழா’ அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ள 6 மெகா பட்ஜெட் திரைப்படங்கள்
கேஜிஎஃப்: அத்தியாயம் 2
யஷ் நடித்த படத்தின் "கேஜிஎஃப்" படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் "கேஜிஎஃப் அத்தியாயம் 2" படத்தின் வெளியீட்டு நாளின் திட்டத்தை மாற்றிக்கொள்ளும் மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக அறிவித்தபடி ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராதே ஷ்யாம்
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வருகிறது. மேலும் இது இறுதியாக மார்ச் இரண்டாவது வாரத்தில் திரையில் வெளிச்சத்தைக் காணும் என எதிர் பார்க்கப்பட்டது. அதைபோலவே ராதே ஷ்யாம் படத்தின் வெளியீடு மார்ச் 11 அன்று என அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியானது.
மேலும் படியுங்கள்: இந்த வாரம் ரிலீஸாகும் விக்ரம், விஜய் சேதுபதி திரைப்படங்கள்
ஜேம்ஸ்
கடந்த ஆண்டு அக்டோபரில் நடிகர் புனித் ராஜ்குமார் அகால மரணமடைவதற்கு முன்பு நடித்த கடைசி படம் இதுவாகும். மறைந்த திரைப்பட ஐகானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், "ஜேம்ஸ்" படத்துடன் இணைந்து வேறு எந்த திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்று கன்னட திரையுலகம் முடிவு செய்துள்ளது. நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17 அன்று ஜேம்ஸ் திரையரங்குகளில் வெளியாகுகிறது. இந்த கன்னடப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
பீமா நாயக்
பவன் கல்யாண் நடித்துள்ள "பீமா நாயக்" படமும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் "ஆர்.ஆர்.ஆர்" மற்றும் பிரபாஸின் "ராதே ஷ்யாம்" ஆகிய படங்களுக்கு சங்கராந்தியை குறிவைத்து படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருந்தனர். இதன் காரணமாக "பீமா நாயக்" படம் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டது. "பீமா நாயக்" படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியிடுவதில் உறுதியாக உள்ளனர். இதற்கிடையில் எதிர்பாராத சவால்கள் ஏதேனும் ஏற்பட்டால், படம் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் படியுங்கள்: மாறன் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
ஆச்சார்யா
கொரட்டால சிவா இயக்கத்தில், சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள "ஆச்சார்யா" படத்தில் ராம்சரணும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தை ராம்சரணே தயாரித்தும் உள்ளார். ஆனால் பல படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளதால் "ஆச்சார்யா" படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் வெளியீட்டுத் திட்டத்தை மாற்றியுள்ளனர். தற்போது ஏப்ரல் 29-ம் தேதி "ஆச்சார்யா" திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சர்க்காரு வரி பாட்டா
டோல்வியூட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் "சர்காரு வாரி பாட்டா" திரைப்படம் மே 12 ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். "சர்காரு வாரி பாட்டா" படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் ப்ளஸ் மற்றும் ஜிஎம்பி என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் படியுங்கள்: ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட்? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR