ஹாசினிக்கு தெரிய வரும் உண்மை - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: ஹாசினிக்கு தெரிய வரும் கங்காதரன் குறித்த உண்மை.. மாரி கொடுத்த சர்ப்ரைஸ்..பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : Jul 6, 2023, 11:48 AM IST
  • ஹாசினிக்கு தெரிய வரும் கங்காதரன் குறித்த உண்மை.
  • மாரி கொடுத்த சர்ப்ரைஸ்.
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
ஹாசினிக்கு தெரிய வரும் உண்மை - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆபிஸில் மாரி செய்த செயலை சூர்யா பாராட்டி பேச அனைவரும் சந்தோசப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சூர்யா மாரியை மரியாதையாக மேடம் என்று அழைக்க அவள் என்ன ஹஸ்பண்ட் சார் நீங்க இப்படி கூப்படறீங்க, இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், என்னை பழையபடியே கூப்பிடுங்க என்று சொல்ல சூர்யா சந்தோஷமடைகிறான். அதனை தொடர்ந்து ரூமில் தாரா டீம் எல்லாரும் ஒன்று சேர்ந்து பேசி கொண்டிருந்த போது அப்போது கங்காதரன் போன் செய்ய சங்கரபாண்டி நாம பேசிட்டு இருக்கும் போது தான் இவன் கரெக்ட்டா போன் பண்ணுவான், நீ அவன் கூட பேசிட்டே இரு, அங்க எங்க இருந்து பேசுறானு டிராக் பண்ணி கண்டு பிடிக்கலாம் என்று திட்டம் போட்டு தாரா அவனிடம் பேச சங்கரபாண்டி தனக்கு தெரிந்த நண்பர் மூலமாக இந்த நம்பரை டிராக் செய்கிறான். 

மேலும் படிக்க | சினிமாவை விட்டு விலகும் சமந்தா..? ‘அந்த’ பாதிப்புதான் காரணமா..?

mari

ஹாசினிக்கு வந்திருப்பது கங்காதாரன் தான் என தெரிய வர அவர் தாராவை மிரட்டி பேசுவதையெல்லாம் கேட்டு சந்தோசப்படுகிறாள், இங்கே நம்பர் டிராக் செய்ததில் கிட்டத்தட்ட ஒரே வீட்டில் இருந்து தான் பேச வேண்டும் என சொல்ல அப்போது அந்த கண் தெரியாதவர் போல வந்திருப்பது கங்காதரனாக தான் இருக்கும் என சந்தேகப்படுகின்றனர். கையும் களவுமாக பிடித்து விடலாம் என கங்காதரன் ரூமை நோக்கி வர அதை பார்த்த ஹாசினி முக்காடு போட்டு கொண்டு ஓடி இவர்களை திசை திருப்பி கங்காதரனை தப்பிக்க வைக்கிறாள், இவளை பின் தொடர்ந்து சென்று ஒரு வீட்டுக்குள் நுழைந்த சங்கரபாண்டியை திருடன் என நினைத்து அக்கம் பக்கத்தினர் அடித்து வெளுக்கின்றனர். 

பின்னர் மாரி ஆபிசில் இன்னைக்கு உங்க எல்லாருக்கும் சம்பளத்துடன் விடுமுறை, கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்த போகிறோம் என்று சொல்லி வளைக்காப்பு நடத்தி உங்கள் பிரசவம் செலவு, குழந்தையோட படிப்பு செலவையெல்லாம் கம்பெனியே ஏற்று கொள்ளும் என்று சொல்ல எல்லாரும் மாரியை பாராட்ட தேவியம்மா இதை பார்த்து சந்தோசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சினிமாவில் சாதி கிடையாது - சின்ன கவுண்டர், எஜமான் படத்தின் இயக்குனர் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News