மாரியின் திட்டத்தை கெடுத்த ஜாஸ்மின் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: மாரியின் திட்டத்தை கெடுத்த ஜாஸ்மின்.. தாராவுக்கு ஷாக்..பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2023, 10:28 AM IST
  • மாரியின் திட்டத்தை கெடுத்த ஜாஸ்மின்.
  • மாரி கொடுத்த ஷாக்.
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
மாரியின் திட்டத்தை கெடுத்த ஜாஸ்மின் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெளிவர தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் தேவி சூர்யாவிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும், அதற்காக நீ பௌர்ணமி பூஜை செய் என மாரியிடம் சொல்ல மாரியும் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் மாரி தயிர் சாதம் சமைக்க சங்கரபாண்டி மற்றும் ஜாஸ்மின் இருவரும் யாருக்கும் தெரியாமல் அதில் தூக்க மாத்திரையை கலந்து விடுகின்றனர். இதனையடுத்து மாரி மொட்டை மாடியில் சந்திர பகவானுக்கு பூஜை செய்து பிறகு கீழே வந்து அந்த பிரசாதத்தை சூர்யாவிடம் கொடுத்து இதை நீங்க மட்டும் தான் சாப்பிட வேண்டும், இதை சாப்பிட்டால் ஒரு ஆச்சரியமான விஷயம் நடக்கும் என்று சொல்லிக் கொடுக்க சூர்யாவும் அதை சாப்பிடுகிறான். 

மேலும் படிக்க | திரைப்பட விழாவில் 3 விருதுகளை அள்ளிய 'கண்ணே கலைமானே'

maar

அடுத்ததாக மாரி வெளியே போக அதற்குள் சூர்யா தூக்க மாத்திரை கலந்த தயிர் சாதத்தை சாப்பிட்டதால் தூங்கி விட தேவி அம்மா தோன்றி சூர்யாவை எழுப்ப முயற்சி செய்தும் முடியாமல் போகிறது. பிறகு சூர்யாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவர் ஒரு தாலாட்டு பாட்டு பாட மாரி வீட்டுக்குள் வருகிறாள். சூர்யா தூங்குவதை பார்த்து என்னன்னா அவர் தூங்கிட்டாரா என்று கேட்க ஆமா நான் வரும்போதே அவன் தூங்கிட்டு தான் இருந்தான், அப்ப நீங்க சொல்ல வந்த விஷயம் என கேட்க சொல்ல முடியல என்று சொல்கிறார். இதை சங்கர பாண்டி மற்றும் ஜாஸ்மின் பார்த்து தேவி விசயத்தை சொல்லவில்லை என சந்தோஷப்பட மாரிக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்து ஜாஸ்மின் அறைந்து இனி உன்னை இந்த வீட்டில் இருக்க விட மாட்டேன் என சவால் விடுகிறாள். அடுத்ததாக ஜாஸ்மின் மாரியிடம் அடி வாங்கிய கோபத்தில் சங்கர பாண்டியை அடிக்கிறாள். 

அதற்கு அடுத்ததாக தாரா ரூமுக்குள் இருக்கும்போது ஒரு கருப்பு உருவம் அங்கு வர தாரா உன்னை யார் இங்க வர சொன்னது? நான் எதுவா இருந்தாலும் உனக்கு போன் தான் பண்ண சொல்லி இருக்கேன் என்று சொல்ல கருப்பு உருவம் ஒரு முக்கியமான விஷயம் என்று சொல்லி விக்ரம் தாராவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் வேலையில் இறங்கி இருக்கும் விஷயத்தை சொல்கிறது. உஷாரா இருங்க என்று சொல்ல இன்னொரு பக்கம் சங்கர பாண்டி இதைப் பார்த்து விடுவானோ என்ற பில்டப் அதிகமாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சினிமாவில் சாதி கிடையாது - சின்ன கவுண்டர், எஜமான் படத்தின் இயக்குனர் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News