“விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு” லோகேஷ் கனகராஜ் பளிச் பேட்டி!

Lokesh Kanagaraj Interview about Leo: லியோ படம் விரைவில் வெளியாக உள்ளதை அடுத்து லோகேஷ் கனகராஜ் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Oct 8, 2023, 12:17 PM IST
  • லியோ படம் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளது.
  • லோகேஷ் கனகராஜ் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.
  • விஜய் டிரைலரில் கெட்ட வார்த்தை பேசியதற்கு தானே பொறுப்பு என்று கூறியுள்ளார்.
“விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு” லோகேஷ் கனகராஜ் பளிச் பேட்டி!  title=

விஜய்யுடன், லாேகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக பணியற்றியுள்ள படம் லியோ. இப்படம், வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த இவர்கள் லியோ படத்தில் புதுப்புது விஷயங்களை களமிறக்கியுள்ளனர். லியோ படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணில் கூறியுள்ளார். 

லியோ திரைப்படம்:

யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோவாக இருக்கிறது ‘லியோ’ படத்தின் டிரைலர். கடந்த 5ஆம் தேதி வெளியான இந்த டிரைலர் 24 மணி நேரத்தில் 26 மில்லியன் வியூஸ்களை கடந்தது. இந்த படத்தில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜூன், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல நேர்காணல்களில் கலந்து கொண்டார். அதில் லியோ படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். 

கெட்ட வார்த்தை பேசிய விஜய்..

லியோ படத்தின் டிரைலரில் நடிகர் விஜய் பெண்களை ஆபசமாக குறிப்பிடும் ஒரு தகாத வார்த்தையை பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்து. இதை எதிர்த்து சிலர் விஜய்க்கும், லியோ படக்குழுவிற்கும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே “நான் ரெடி” பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போல இடம் பெற்றுள்ள புகைப்படங்களுக்கு கண்டனம் எழுந்த நிலையில், தற்போது இந்த புதிய சர்ச்சையும் கிளம்பியுள்ளது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் தனது நேர்காணலில் பேசியுள்ளார். 

மேலும் படிக்க | விஜய்யின் லியோ படத்தில் தனுஷ்? வெளியானது உண்மை!

“நான்தான் பொறுப்பு..”

லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட நேர்காணலில் அவரிடம் லியோ பட டிரைலரில் இடம் பெற்றிருந்த கெட்ட வார்த்தை குறித்தும் அது குறித்து எழுந்த சர்ச்சை குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், விஜய் சில காட்சிகள் ஒத்துவருமா என தன்னிடம் கேட்டதாகவும் தான்தான் அதில் நடிக்க சொல்லி கூறியதாகவும் குறிப்பிட்டார். இதனால் அவர் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு என்றும் கூறினார். 

சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த லோகேஷ்..

லியோ திரைப்படம் எல்.சி.யுவில் இருக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ், “படம் வெளியாக இன்னும் 10நாட்கள்தான் உள்ளது..ரிலீஸிற்கு பிறகு எல்லாமே தெரிந்து விடும் என்று கூறியுள்ளார். 

“விஜய்க்கும் எனக்கும் சண்டையா..?”

நடிகர் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜ்ஜிற்கும் சண்டை என்று லியோ படத்தின் படப்பிடிப்பின் போது கூறப்பட்டது. இது குறித்து லோகேஷிடம் கேள்வி கேட்ட போது, “அந்த செய்தியை பார்த்து நானும் விஜய் அண்ணாவும் நன்றாக சிரித்தோம்” என்று கூறியுள்ளார். 

விஜய்யின் வர்க் அவுட் குறித்து பேசிய லோகேஷ்…

லோகேஷ் கனகராஜ் விஜய்யின் வர்க் அவுட் குறித்தும் பேசினார். அப்போது, நடிகர் விஜய் 35-40 நிமிடங்கள் வரை கார்டியோ வர்க் அவுட் செய்வதாகவும் மிகவும் குறைவாகவே உணவு எடுத்து கொள்வார் என்றும் கூறியுள்ளார். லியோ படப்பிடிப்பு தளத்திலும் அதற்கென்று தனி செட் போடப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இசை வெளியீட்டு விழா நடக்காதது ஏன்..? 

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து பேசிய லோகேஷ், 6,000 பேருக்கு மட்டும்தான் நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் அனுமதிக்க முடியும் என்ற நிலை இருந்ததாகவும் ஆனால் 70 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் டிக்கெட்டுகள் வேண்டும் என்று கேட்டதால் அவ்விழாவை நடத்த முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | லியோ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்! படக்குழுவினருக்கு நடந்த துயர சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News