நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இதையடுத்து படம் கலவையான விமர்சனத்தை பெற்றுது. மேலும் திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டது. சுமார் 461 கோடி ரூபாய் கடந்த ஏழு நாட்களில் படம் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனவும் அதில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார் எனவும் கூறப்படுகிறது. எனவே இதற்காக பாதுகாப்பு வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: இந்த வாரம் 2 எவிக்ஷன்! வெளியேறிய போட்டியாளர்கள் யார் யார்?
இதற்கு பெரியமேடு காவல் நிலையம் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் லியோ படத்தின் வெற்றி விழா எத்தனை மணிக்கு தொடங்கப்பட்டு எத்தனை மணிக்கு முடிக்கப்படும், முக்கிய பிரமுகர்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள், எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, அங்கு 5000 இருக்கைகள் மட்டுமே உள்ளது என காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்து கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து கொடுக்கப்படும் கடிதத்தின் அடிப்படையில் அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு லியோ படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட்ட கடிதம் பரிசீலனையில் உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லியோ வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் 10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.490 கோடி வசூலித்துள்ளது. ரஜினிகாந்தின் 2.0 படத்தைத் தொடர்ந்து யுகே மற்றும் இந்தியாவிலேயே அதிக தமிழ் வசூல் செய்த படமாக இப்படம் மாறியுள்ளது. லியோ படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டராக மாறியுள்ளது, மேலும் 2வது வாரத்திலும் நல்ல வசூல் செய்து வருகிறது. விரைவில் இப்படம் ரூ.500 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 10ஆம் தேதி படத்தின் OTT வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்டோபர் 28ஆம் தேதி நடந்த 'ஜப்பான்' ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், 'லியோ' படம் நிறைய வசூல் செய்தது எனக்குத் தெரியும். கலவையான விமர்சனங்கள் மற்றும் பலருக்கு படம் பிடிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்.
— Trish (@trishtrashers) October 26, 2023
மாஸ்டருக்குப் பிறகு விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் லியோ. லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7 வைல்ட் கார்ட்: போட்டிக்குள் பாதியில் நுழையும் 5 பேர் இவர்கள்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ