தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எந்த தளத்தில், எப்போது முதல் பார்க்கலாம்?

The GOAT Movie OTT Release : விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Sep 27, 2024, 04:37 PM IST
  • தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ்!
  • எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
  • முழு விவரம்!
தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எந்த தளத்தில், எப்போது முதல் பார்க்கலாம்?  title=

The GOAT Movie OTT Release : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குபவர், விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை, இங்கு பார்ப்போம். 

தி காேட் படம்:

விரைவில் தமிழ் திரையுலகை விட்டு விலக இருக்கும் நடிகர் விஜய், கடைசி படத்திற்கு முந்தைய படமாக ‘தி கோட்’ படத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியாேர் நடித்திருக்கின்றனர். இந்த படம் மூலமாக, நடிகர் விஜய் பல நாட்களுக்கு பிறகு நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைக் மாேகன் இதில் வில்லனாக வருகிறார். 

ஓடிடி ரிலீஸ்:

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் அதிக அளவில் ஓடிடி தளங்கள் அதிகரித்து விட்டது. இதனால், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 2 அல்லது 3 வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில், கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. 

எப்போது? எந்த தளத்தில்? 

தி கோட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றிருக்கிறது. சாட்லைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்குள் தி கோட் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை, தியேட்டரில் பெரும்பாலானவர்கள் பார்த்து விட்டாலும், ஓடிடியில் பார்ப்பதற்காக காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | GOAT Movie review : விஜய்யின் The GOAT படம் மாஸா? தூசா? விமர்சனம் இதோ!!

The GOAT

படம் எப்படி?

தி கோட் படம், உண்மையாகவே ரசிகர்கள் மத்தியில் சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. படம், முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சம் நிறைந்ததாக இருந்தாலும், அது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருந்ததால், பெரும்பான்மையானவர்களுக்கு படம் பிடித்திருந்தது. போதாக்குறைக்கு, படத்தில் ஆங்காங்கே வெவ்வேறு ஹீரோக்களின் ரெஃபரன்ஸ்களும், இறுதி காட்சியில் சிஎஸ்கே அணி மற்றும் தோனியையும் காண்பித்திருந்தனர். இது, ரசிகர்களுக்கு படத்தை பிடிக்க பெரிய காரணமாக அமைந்து விட்டது. 

விரைவில் அரசியலில் முழு நேரமாக களம் காணும் நடிகர் விஜய், இனி திரையுலகிற்கு வருவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதனால், முடிந்தவரை இவரது படத்தை கொண்டாடி தீர்க்க வேண்டும் என எண்ணிய ரசிகர்கள், ஒரு வழியாக 20 நாட்களுக்கும் மேல் படத்தை ஓட வைத்து விட்டனர். காேட் படத்தை அடுத்து எத்தனையோ படங்கள் வெளியான போதிலும், இந்த படம் இன்னும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதற்கு, அதுவும் ஒரு காரணம். படத்தின் பாடல்களும் தற்போது மெகா ஹிட் அடித்திருக்கிறது. 

தளபதி 69:

விஜய், தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை, ஹெச்.வினோத் இயக்குகிறார். அடுத்த வருடம் அக்டோபரில் வெளியாக இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பின்பு, விஜய் அரசியலில் களம் காண்கிறார். இப்படத்தை, தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது, அவர்கள் தயாரிக்கும் முதல் தமிழ் படமாகும். 

மேலும் படிக்க | OTT Releases : இந்த வார ஓடிடி விருந்து! எந்த புதுப்படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News