Latest News Serial Actor Yuvanraj Nethran Death : சின்னத்திரையில், பல நடிகர்கள் வில்லன்களாகவும், ஹீரோக்களாகவும் நடித்தாலும் ஒரு சிலரின் கதாப்பாத்திரங்கள் மட்டுமே நினைவில் நிற்கும் வகையில் இருக்கும். அப்படி, தன் பாத்திரங்களின் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்தவர், பிரபல சீரியல் நடிகர் நேத்ரன். இவர், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருப்பது, சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
யார் இந்த நேத்ரன்?
நேத்ரனின் முழு பெயர், யுவன்ராஜ் நேத்ரன். மருதாணி என்ற தமிழ் தொடர் மூலம் நடித்து பிரபலமானவர், நடிகர் நேத்ரன். இவரது கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும், நெகடிவ் ஷேட் பொருந்தியவையாகவும், வில்லத்தனம் நிறைந்ததாகவும் இருக்கும். ஒரு சில, பிரபல ஹீரோக்களின் திரைப்படங்களில் இவர் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரியாலிட்டு ஷோக்கள் மற்றும் பிற சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனது முகத்தினை பதியவைத்து கொண்டே இருந்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான, மஸ்தானா மஸ்தானா நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார். அதன் பிறகு ஜோடி நம்பர் 1 சீசன் 3 மற்றும் 5லும் பங்கேற்று இருக்கிறார். அதே போல, மிஸ்டர் அண்ட் மிஸ்சர்ஸ் சின்னத்திரை கில்லாடீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இவர், தொடர்ந்து சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
இவரும், இவரைப்போலவே சின்னத்திரை மூலம் பிரபலமான நேத்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தீபா, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடித்து வருகிறார். இவர்களுக்கு, அபிநயா மற்றும் அஞ்சனா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில், அபிநயா சீரியல்களில் கதாநாயகியாக நடிக்க, அஞ்சனா சமீபத்தில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க சைன் செய்தார். சமீபத்தில் இவர் நடித்து வந்த தொடர், பொன்னி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தாெடரில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
புற்றுநோய் பாதிப்பு..
நடிகர் நேத்ரன் மட்டுமன்றி, அவரது குடும்பத்தினர் அனைவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். நால்வரும் அடிக்கடி ரீல்ஸ் செய்து வெளியிடுவது, போட்டோக்களை போடுவது வாடிக்கையாகும். இதையடுத்து அவரது மகள் அபிநயா தனது தந்தை புற்றுநோயால் பாதித்திருப்பதை, சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அதிர்ச்சி! துணிவு பட நடிகர் திடீர் மரணம்..ஷாக்கில் ரசிகர்கள்!
நேத்ரனை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரது குடும்பத்தினர் இன்னும் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
மகள் குறித்து போட்ட பதிவு!
நடிகர் நேத்ரன், தான் இறப்பதற்கு 3 வாரங்களுக்கு முன்பு, தனது மகள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், இரண்டாவது மகள் அஞ்சனா, வீட்டிலேயே நாட்டு சர்க்கரை வைத்து பிஸ்கட்டுகளை செய்து கொடுத்ததாகவும், அது மிகவும் சுவையாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இதுதான் இவர் போட்ட கடைசி பதிவு என்பதால், ரசிகர்கள் பலர் இந்த போஸ்டில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர்கள் இரங்கல்..
நேத்ரன் உயிரிழந்துள்ள செய்தியை கேள்விப்பட்டு, சின்னத்திரையை சேர்ந்த பலர் தற்போது அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பிரபல சினிமா துணை நடிகர் மரணம்..2 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ