‘லால் சலாம்’ படத்தின் தோல்விக்கு காரணம் என்ன? மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Aishwarya Rajinikanth About Lal Salaam Movie : ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படம் தாேல்வியடைந்ததை ஒட்டி, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனம் திறந்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Mar 8, 2024, 11:03 AM IST
  • லால் சலாம் பட தோல்விக்கான காரணம் என்ன?
  • மனம் திறாந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
  • இது முதலில் எழுதப்பட்ட ஸ்கிரிப்டே இல்லை என பேச்சு
‘லால் சலாம்’ படத்தின் தோல்விக்கு காரணம் என்ன? மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! title=

Aishwarya Rajinikanth About Lal Salaam Movie : பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற படம் லால் சலாம். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், போட்ட பட்ஜெட்டை கூட எடுக்காமல் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனம் திறந்திருக்கிறார். 

லால் சலாம் திரைப்படம்:

தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து ஐஸ்வர்யா முதல் முறையாக இயக்கியிருந்த படம், லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் இவரது ‘மொய்தீன் பாய்’ கதாப்பாத்திரம் படத்தில் 40 நிமிடங்களுக்கும் மேலே இடம் பெற்றிருந்ததால் இது, நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோல் என்றும் கூறப்பட்டது. 

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிரிக்கெட்டையும் மத அரசியலையும் வைத்து உருவாகியிருந்த இப்படத்தின் கதை, ரசிகர்களின் மனத்தில் எதிர்பார்த்த அளவிளான வரவேற்பினை பெறவில்லை.

படத்திற்கு வந்த விமர்சனங்கள்..

லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் பலர் எக்கச்சக்கமான விமர்சனங்களை அளித்திருந்தனர். அதில், ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் படம் முழுவதும் வருவதாகவும், அந்த கேரக்டர் கேமியோ போலவே தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், படத்தின் மையக்கரு நன்றாக இருப்பதாகவும் அதை நேர்த்தியான வகையில் கூறியிருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டது. இன்னும் சிலர் படத்தின் முதல் பாதியில் வரும் சில காட்சிகளும் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகளும் குழப்பமாக இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த விமர்சனங்களுக்கும் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க | நடிகர் அஜித்திற்கு மூளையில் கட்டியா...? அறுவை சிகிச்சை முடிந்தது? - பரபரப்பு தகவல்கள்!

தோல்விக்கான காரணம் என்ன? 

படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தான் லால் சலாம் படத்திற்காக வைத்திருந்த ஸ்கிரிப்ட் வேறு என்றும், ஆனால் படத்தின் அவுட்புட் வேறு என்றும் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்தின் காட்சிகள் 10 நிமிடங்களுக்கு மட்டுமே வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவரது கதாப்பாத்திரம் வந்தவுடன் படம் அவரை சுற்றி ட்ராவல் செய்யும் வகையில் எடிட் செய்ததாக கூறியிருக்கிறார்.

ரிலீஸிற்கு இரண்டு நாட்களுக்கு முன் எடிட்..

லால் சலாம் படம், ஏற்கனவே பொங்கலன்று ரிலீஸாக இருந்தது. ஆனால் சில காரணங்களினால் இந்த ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில், படம் ரிலீஸாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் அனைத்தையும் ரீ-எடிட் செய்ததாகவும். அப்போது நான்-லீனியராக இருந்த இரண்டாவது பாதியும், அதற்கு எதிராக இருந்த இரண்டாவது பாதியும் ரசிகர்களுக்கு சரியாக சென்று சேரவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் படம் தோல்வி அடைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வதாகவும் ஒரு இயக்குநராக இது தனக்கு பெரிய அனுபவமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா, நேர்மையாக தனது படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ள விஷயம், ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சுமார் 75 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட லால் சலாம் திரைப்படம், மொத்தமாக சுமார் 16 கோடிதான் கலெக்ட் செய்ததாக கூறப்பட்டது. 

மேலும் படிக்க | வொண்டர் வுமன் பட நாயகிக்கு 4வது குழந்தை பிறந்தது! வைரலாகும் Gal Gadot-ன் பதிவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News