விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?

Actor Vijay Sethupathi Vignesh Shivan Fight : தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்டதாக கூறியிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 16, 2024, 06:26 AM IST
  • விஜய் சேதுபதி-விக்னேஷ் சிவனின் சண்டை
  • இடையில் புகுந்த நயன்தாரா
  • நடந்தது என்ன?
விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?  title=

Actor Vijay Sethupathi Vignesh Shivan Fight : கோலிவுட் திரை உலகில் தற்போது டாப் நடிகராக விளங்குபவர் விஜய் சேதுபதி. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் துணை நடிகராக அறிமுகமான இவர் தென்மேற்கு பருவக்காற்று படம் நாயகனாக மாறினார். இப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய, தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இந்திய அளவில் பெரிதும் தேடப்படும் நடிகராகவும் தற்போது முன்னேறி இருக்கிறார். 

நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி: 

2015ஆம் ஆண்டுவெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் நானும் ரவுடி தான். ரவுடியாக இருந்தால்தான் கெத்து என்று நினைத்துக் கொண்டு முழு நேர ரவுடியாக மாற நினைக்கும் இளைஞனுக்கும், அவன் காதலிக்கும் பெண்ணின் எதிரிக்கும் இடையே நடக்கும் கதைதான் நான் ரவுடி தான். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சிம்பிள் கதையாக இருந்தாலும் காமெடி மற்றும் காதல் காட்சிகளால் இப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட் அடித்தது. இந்த படப்பிடிப்பின் போது தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நடைபெற்ற கருத்து வேறுபாடு குறித்து விஜய் சேதுபதி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திரிந்து இருக்கிறார். 

கருத்து வேறுபாடு: 

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் மகாராஜா. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்தப் படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி நானும் ரவுடி தான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். 

நானும் ரவுடி தான் படத்தில் சூட்டிங் ஆரம்பிக்கையில், விக்னேஷ் சிவன் தனக்கு நடிப்பு சொல்லித் தருவதாக எண்ணியதாகவும் இதனால் அவரை ஒரு முறை சத்தம் போட்டு விட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின்பு அது சமூகமாக சில நாட்கள் பிடித்ததாக கூறியிருக்கிறார். முதலில் விக்னேஷ் சிவன் தன்னிடம் வந்து கதையை சொன்னபோது அது தனக்கு பிடித்திருந்ததாகவும் படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் அவர் கூறியதை பின்பற்ற முயற்சித்தது ஆகும் விஜய் சேதுபதி கூறினார். 

மேலும் படிக்க | Vijay Sethupathi: பெரிய வீடு, ஆடம்பர கார்-அசர வைக்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு!

தனக்கு விக்னேஷ் சிவன் நடிப்பு சொல்லிக் கொடுப்பது போல் உணர்ந்ததாகவும் இதனால் அவரிடம் சண்டையிட்டதாகவும்  கூறியிருக்கிறார். இந்த சண்டை முடிந்த சில நாட்கள் கழித்து நயன்தாரா இது குறித்து விசாரித்ததாகவும், பின்னர் நானும் ரவுடி தான் படத்தில் ஹீரோ கேரக்டர் பாண்டியை உள்வாங்கி நடிக்க நேரம் எடுத்ததாகவும் கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. படப்பிடிப்பு நடந்த முதல் நான்கு நாட்கள் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க தனக்கு பயமாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 

விக்னேஷ் சிவனுக்கு பாராட்டு:

விக்னேஷ் இவனை தனித்துவமான மற்றும் திறமை மிக்க இயக்குனர்களும் ஒருவர் என்று பாராட்டிய விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி, அவரை புதிய தலைமுறையின் இயக்குனர்களின் ஒருவர் என்று புகழ்ந்தார். குறிப்பாக காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படத்தின் கதைகளை சரியாக கையாள்வதற்கு இவர் தான் சரியானவர் என்றும் கூறினார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று நானும் ரவுடிதான் இன்னொன்று காத்து வாக்குல ரெண்டு காதல். 

மேலும் படிக்க | மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News