கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்? காரணம் என்ன?

Dulquer Salmaan Rumored To Be Opted Out Of Thug Life Movie : கமல்ஹாசனும் மணிரத்னமும் பல நாட்களுக்கு பிறகு கைக்கோர்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 5, 2024, 11:46 AM IST
  • தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்?
  • துல்கரின் செயலால் ரசிகர்கள் ஏமாற்றம்!
  • காரணம் என்ன?
கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்? காரணம் என்ன? title=

மணிரத்னம், கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் படம் ‘தக் லைஃப்’. நாயகன் படத்திற்கு பிறகு இவர்கள் கைக்காேர்க்கும் முதல் படம் இது. இப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருந்தார். இந்த நிலையில், அவர் இதில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தக் லைஃப்:

1987ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படத்திற்கு பிறகு, 37 வருடங்களுக்கு பிறகு கைக்கோர்த்துள்ள படம், ‘தக் லைஃப்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இது கமல்ஹாசனின் 234வது படமாகும். இது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இதில், நடிகர் கமல்ஹாசன் ‘ரங்கராய சக்திவேல் நாயக்கன்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் நடிப்பவர்கள் யார் யார் என்ற விவரமும் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. 

படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்..

‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் இவர், நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர், மலையாள சினிமாவில் மட்டுமன்றி தமிழ் திரையுலகில் அதிகளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். இவர், மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நிலையில், அவரை தக் லைஃப் படத்தில் நடிக்க வைக்க, படக்குழுவினர் ஆயத்தாகினர். ஆனால், அவர் தற்போது நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

காரணம் என்ன? 

துல்கர் சல்மான, தக் லைஃப் படத்தில் இருந்து விலகியதற்கு அவர் அடுத்தடுத்து வெவ்வேறு படத்தில் கமிட் ஆனதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. மணிரத்னமுடன் இரண்டாவது முறையாக கைக்கோர்க்க இருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு கை நழுவி போயுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. 

மேலும் படிக்க | Manjummel Boys: 100 கோடி வசூலை தாண்டிய மஞ்சுமெல் பாய்ஸ்! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?

தக் லைஃப் படத்தில் நடிப்பவர்கள் யார் யார் ?

மணிரத்னம், தக் லைஃப் படத்தில் இதற்கு முன்னர் தனது படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளையே படக்குழுவினராக சேர்த்துள்ளார். த்ரிஷா, இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர், ஏற்கனவே மணி ரத்னமின் ‘ஆயுத எழுத்து’ படத்திலும், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்தார். இதையடுத்து, நடிகர் ஜெயம் ரவியும் இதில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருகிறார். ஐஸ்வர்யா லக்ஷமி, கௌதம் கார்த்திக், நாசர் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். 

தக் லைஃப் என்றால் என்ன? 

தக் லைஃப் என்பதற்கு அர்த்தம், எவன் ஒருவன் பூஜ்ஜியத்தில் தொடங்கி தனக்கு பெயர் சேர்க்கும் வகையில் ஏதோ ஒன்றை அல்லது தன்னையே பெரிதாக வளர்த்து கொள்கிறானோ, அவனை தக் என்பர். சிம்பிளாக சொல்லப்போனால், இழப்பதற்கு எதுவும் இல்லாத எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் தைரியமான வாழ்கை உடையவனனின் வாழ்வையே பலர் ‘தக் லைஃப்’ என்று பிற நாடுகளில் குறிப்பிடுகின்றனர். 

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ‘நாயக்கர்’ பரம்பரையை சேர்ந்தவர்களை “குற்றப்பரம்பரை” என்று குறிப்பிடுவதுண்டு. தக் லைஃப் படத்தின் டைட்டில் வீடியோவில் கமல், “ என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்” என்று கூறுவார். இதனால், இவர்களின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Thug Life என்றால் என்ன? கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுக்கு இப்படி ஒரு அர்த்தமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News