தங்கை பாசத்தை பேசும் ஆக்ஷ்ன் த்ரில்லர் படம் “குலசாமி” ஏப்ரல் 21 திரைக்கு வருகிறது

Kulasami Official Trailer: ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'குலசாமி' திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தபடத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2023, 01:04 PM IST
  • ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் குலசாமி படம் ஏப்ரல் 21ம் தேதி திரைக்கு வருகிறது.
  • மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு குலசாமி வந்துள்ளது - இயக்குனர்.
  • நாயகன், நாயகி வராதது வருத்தம். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள் -இயக்குனர் அமீர்.
தங்கை பாசத்தை பேசும் ஆக்ஷ்ன் த்ரில்லர் படம் “குலசாமி” ஏப்ரல் 21 திரைக்கு வருகிறது title=

Kulasami Release Date: நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் நடிக்கும் படத்திற்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் தான் 'குலசாமி'. இந்த படத்தை எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (MIK Productions Private Limited) தயாரித்துள்ளது. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இனிதே  நடைபெற்றது. 

விமல், தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சரவண சக்தி அவர்களின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார். வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும்,ஜீ  தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். மேலும், இப்படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

மேலும் படிக்க: நடிகை இலியானா கர்ப்பம்..‘எப்புட்ரா’? ஷாக் ஆன ரசிகர்கள்

இந்நிகழ்வினில் படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். அதில் முக்கிய விருந்தினராக இயக்குநர் அமீர் கலந்துக்கொண்டார். அவர்கள் 'குலசாமி' படத்தை பற்றி பேசியது குறித்து பார்ப்போம்.

'குலசாமி' படத்தை பற்றி இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது:
இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில்  நடித்திருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி. அமீர் அண்ணன் அவருடைய படங்களை தாண்டி மிகப்பெரிய அன்புள்ள மனிதர் அவர் எனக்காக வந்துள்ளார். சுரேஷ் காமாட்சியும் நானும் ஒன்றாக சுற்றியவர்கள் இப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகியுள்ளார் அவருக்கு நன்றி. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  மிகச்சிறப்பான வசனங்கள் தந்துள்ளார். அவரால் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது. இந்தப்படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் இந்நேரத்தில் நன்றிக் கூறிக்கொள்கிறேன். நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம் படத்திற்கு  உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 

'குலசாமி' பற்றி இசையமைப்பாளர் மஹாலிங்கம் பேசியதாவது:
தயாரிப்பாளரும் நானும்  ஒரே ஊர்க்காரர்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் என் கிராமத்து இசையை ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் எனக்கு பிடித்ததை செய்து கொண்டிருந்தேன் அதைப்பார்த்து இந்தப்படத்திற்கு இசை அமையுங்கள் என்றார் தயாரிப்பாளர். இந்தக்களம் பெரிது புதிது என்பதால் தயங்கினேன் ஆனால் படக்குழு தைரியம் தந்தார்கள். இயக்குநர் எனக்கு ஊக்கம் தந்தார்.  நாங்கள் புது டீம் நீங்கள் தான் எங்களுக்கு ஆதரவு தந்து எங்கள் படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும். நன்றி. 

மேலும் படிக்க: Cholas Are Back: மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் டீம்! ஒன்று கூடிய திரைப்பட நட்சத்திரங்கள்

'குலசாமி' படம் ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவி  பேசியதாவது:
என்னுடைய கேரியரை பிரஸ் போட்டோகிராபராக தான் ஆரம்பித்தேன் பிசி சாரிடம் தான் கேமரா கற்றுக்கொண்டேன். சரவண சக்தி கதை சொன்னபோதே இந்தப்படம் பெரிய வகையில் வரும் என்று தெரிந்தது. சரவண சக்தி மிகச்சிறந்த வகையில் இயக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது:
நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். நான் காசில்லாமல் வேலைக்காக வெளிநாடு சென்ற போதே அவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்தார். நான் இங்கு வந்தபிறகும் அவர் அதே முயற்சியில் விடாப்பிடியாக இருந்தார். நல்ல திறமைசாலி பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை.  அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் ஆதன் பாபா பேசியதாவது:
இந்த படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன் அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன், சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள் , இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார், அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம் , சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர், அதன் பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர், நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார் , அதன் பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன் அவர் 3 லட்சதிலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார், அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான் , ஒரு வழியாக பேசி கஷ்ட பட்டு படத்தை முடித்து விட்டோம், படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது, "சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார் " என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன் , அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார், அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார், இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது, இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன் உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும். நன்றி. 

மேலும் படிக்க: ஏகே 62 படத்திற்கு முன்பே சூடு பிடிக்கும் அஜித்தின் ஏகே 63 படத்தின் பணிகள்!

'குலசாமி' பற்றி நடிகை தேவதர்ஷினி பேசியதாவது:
நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை, படவா படத்தில் நான் நடித்திருக்கிறேன் அதன் மூலம்தான் சரவணன் சாரை எனக்கு தெரியும் அந்த படத்தில் நான் விமலுக்கு அக்காவாக நடித்துள்ளேன். இந்தப் படத்தில் அக்கா கதாபாத்திரம் இல்லை அதனால் தான் என்னை அழைக்கவில்லை , மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் , படத்தின் டிரைலரை பார்க்கும்போது நன்றாக இருந்தது, விமலை நான் இப்படி பார்த்தது இல்லை எப்போதும் கலகலப்பான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார், ஆனால் இதில் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார், இப்படத்தின் இசையமைப்பாளர் சின்னத் திரையில் இருந்தே எனக்கு அவரை தெரியும் ஒரு நல்ல பாடகர் , பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது, படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி,

தயாரிப்பாளர் நமச்சிவாயம் பேசியதாவது:
இந்தத்திரைப்படம் எங்களுக்கு  மிகவும் முக்கியம் வாய்ந்த படம். ஒரு நல்ல கதையை சொல்லியுள்ளோம். திரை ஜாம்பவான்கள் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 

இயக்குநர் அமீர் பேசியதாவது:
இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர்,  நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்.  இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும்.  அவர்கள் வராதது  எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள். 

மேலும் படிக்க: தனது அறுவை சிகிச்சை பற்றி மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம் ஷிவின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News