KGF 2: டிசம்பர் மத்தியில் முடியும் இறுதிகட்ட படபிடிப்பில் Yash

யஷ், சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் நடித்த கே.எஃப்.ஜி 2 நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். கதாநாயகன் யஷ் இன்று ஹைதராபாத்திற்கு வருவதால் அனைவருக்கும் நல்ல செய்தி கிடைத்துள்ளது. தயாரிப்பாளர்கள் டிசம்பர் நடுப்பகுதியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். பிங்க்வில்லா (PinkVilla) தெரிவித்துள்ள செய்தியின்படி "யஷ் இன்று ஹைதராபாத்திற்கு வந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 26, 2020, 04:51 PM IST
  • KGF 2 திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டிசம்பர் நடுப்பகுதியில் முடிவடையும்
  • கதாநாயகன் யஷ் இன்று ஹைதராபாதில் படபிடிப்பில் கலந்துக் கொள்கிறார்
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் கே.ஜி.எஃப் 2
KGF 2: டிசம்பர் மத்தியில் முடியும் இறுதிகட்ட படபிடிப்பில் Yash  title=

புதுடெல்லி: யஷ், சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் நடித்த கே.எஃப்.ஜி 2 நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். கதாநாயகன் யஷ் இன்று ஹைதராபாத்திற்கு வருவதால் அனைவருக்கும் நல்ல செய்தி கிடைத்துள்ளது. தயாரிப்பாளர்கள் டிசம்பர் நடுப்பகுதியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். பிங்க்வில்லா (PinkVilla) தெரிவித்துள்ள செய்தியின்படி "யஷ் இன்று ஹைதராபாத்திற்கு வந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார்.

டிசம்பர் மாத மத்தியில் படபிடிப்பு முடிந்துவிடும். திரைப்படம் நன்றாக வந்திருப்பதாக, யஷ் உட்பட அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். கேஜிஎஃப் 2 நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கிறது. கொரோனா வைரஸால் ஏற்படும் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைப்படம் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது”  


 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prashanth Neel (@prashanthneel)

பிரசாந்த் நீல் இயக்கும் கேஜிஎஃப் 2 படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் (Hombale Films) நிறுவனத்தின் விஜய் கிரகந்தூர் (Vijay Kiragandur) தயாரிக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிக்கிறார். "சஞ்சய் தத் ஒரு அற்புதமான நடிகர், மற்றும் அவரது உடல் தோற்றம், உருவம், திறமை என கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவர் சஞ்சய் தத்.   கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு திரைப்படம் வந்திருக்கிறது." தொடர்புடைய செய்தி: KGF-2 ரிலீஸ் எப்போது?

இந்த திரைப்படத்தில் அரசியல்வாதியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் (Raveena Tandon), சமீபத்தில் தனது கதாபாத்திரம் குறித்த விவரங்களை வெளியிட்டு, “நான் ஒரு அரசியல்வாதியாக, வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட கதை. திரைப்படத்தின் ஹீரோ மற்றும் படத்தின் வில்லன் என இரு பரிமாணங்களையும் காட்டும் அற்புதமான கதாபாத்திரம், மிகவும் ரசிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

திரைப்படத்தின் இந்தி பதிப்பை ஃபர்ஹான் அக்தர் (Farhan Akhtar) மற்றும் ரித்தேஷ் சித்வானியின் (Ritesh Sidhwani)  எக்செல் என்டர்டெயின்மென்ட் (Excel Entertainment) நிறுவனம் வழங்குகிறது.   

“KGF 2 மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக இருக்கும். நீங்கள் KGF 1 திரைப்படத்தைப் பார்த்திருந்தால், இது எந்த வகையான திரைப்படம் என்பது பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும்.  ஆனால், கேஜிஎஃப் 2,  கேஜிஎஃப் 1 ஐ விட ஐந்து மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும்! ” என்று யஷ் தெரிவித்திருந்தார். இந்த கருத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்திருக்கிறது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News